மகாதீருக்கு இன்று 99 வயது! உடற்பயிற்சி; உணவுக்கட்டுப்பாடு; 6 மணி நேரத் தூக்கம்... மகாதீரின் உற்சாக ரகசியம்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 10: நாட்டின் நீண்ட காலம் பிரதமராக இருந்த துன் டாக்டர் மகாதீர் முகமது இன்று தமது 99 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

1925 ஆம் ஆண்டு ஜூலை 10 ஆம் தேதி  பிறந்த மகாதீர், இரண்டு முறை பிரதமராக பதவி வகித்தார், முதலில் 1981 முதல் 2003 வரை நாட்டின் நான்காவது பிரதமராகப் பதவியேற்றார். அந்த நேரத்தில் அவர் அம்னோ தலைவராகவும், பாரிசான் நேஷனல் தலைவராகவும் பணியாற்றினார்.

ஓய்வு பெற்ற பிறகு, புரோட்டான் மற்றும் பெட்ரோனாஸ் உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு ஆலோசகராக மகாதீர் தொடர்ந்து பணியாற்றினார்.

பெர்டானா லீடர்ஷிப் ஃபவுண்டேஷனின் கெளரவத் தலைவராகவும் அவர் நியமிக்கப்பட்டார், இந்த பதவியை அவர் இன்றுவரை தொடர்கிறார்.

மருத்துவம் படிக்கும் போது தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் பத்திரிகையில் சே டெட் என்ற புனைப்பெயரில் எழுதி வந்த மகாதீர், ஓய்வுக்குப் பிறகும் ஆர்வமுள்ள எழுத்தாளராகத் தொடர்ந்தார்.

14வது பொதுத் தேர்தலுக்கு முன், மகாதீர் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்தார், பின்னர் அவர் அம்னோவில் இருந்து விலகினார்.

பின்னர் அவர் அரசியல் மறுபிரவேசம் செய்தார், டான்ஸ்ரீ முகைதின் யாசின் உட்பட பல முன்னாள் அம்னோ தலைவர்களுடன் இணைந்து பெர்சாத்துவை உருவாக்கினார்.

 மகாதீர் பின்னர் தனது 93வது வயதில் இரண்டாவது முறையாக பிரதமராக பதவி வகித்தார். ஷெரட்டன் நடவடிக்கையை தொடர்ந்து 2020ல் பதவியை ராஜினாமா செய்தார்.

மகாதீரின் நீண்ட ஆயுளும் நல்ல ஆரோக்கியமும் எப்போதுமே ஆர்வத்திற்குரிய விஷயமாக இருந்து வருகிறது. உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஊடகங்களுக்கு அவர் அளித்த பல நேர்காணல்கள் இந்த விஷயத்தை முன்வைக்கின்றன.

கடுமையான உணவுக் கட்டுப்பாட்டினைக் கடைப்பிடிப்பதாகவும், அதிகமாகச் சாப்பிடுவதைத் தவிர்ப்பதாகவும் பல பேட்டிகளில் அவர் தெரிவித்துள்ளார். உடற்பயிற்சி செய்வதாகவும், ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம் தூங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளெ.

இந்த ஆண்டு, டோக்கியோவில் நடைபெற்ற ஆசியாவின் 29வது எதிர்கால நிக்கேய் மன்றத்தில் மகாதீர் உரை நிகழ்த்தினார். 99 வயதை அடைந்தாலும், மகாதீர் சுறுசுறுப்பாக இருக்கிறார்!

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *