போஸ் மலேசியாவின் முன்னாள் மூத்த அதிகாரிக்கு RM 170,000 அபராதம்!

top-news
FREE WEBSITE AD

மலாக்கா, செப் 24: நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மொத்தம் RM 133,000 லஞ்சம் பெற்றதாக 17  குற்றச்சாட்டுகளில் குற்றத்தை ஒப்புக்கொண்ட Pos Malaysia Berhad இன் போக்குவரத்து மேலாண்மைப் பிரிவின் முன்னாள் திட்டமிடல் தலைவருக்கு Ayer Keroh அமர்வு நீதிமன்றத்தால் RM170,000 அபராதம் விதிக்கப்பட்டது.

நீதிபதி எலசபெட் பயா வான், 45 வயதான ஹஸ்ரி மொக்தார் என்ற அந்த அதிகாரிக்குத் தண்டனை விதித்தார், மேலும் அபராதத்தை செலுத்தத் தவறினால் 51 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.

சபா மற்றும் சரவாக்கில் லைன்ஹால் மற்றும் ஷட்டில் சேவைகள் தொடர்பான அவுட்சோர்சிங் பணிக்காக, Pos Malaysia நிறுவனத்திடமிருந்து Onxon Logistics Sdn Bhd க்கு பணம் செலுத்துவதற்கான தூண்டுதலாக லஞ்சம் பெறப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த  2020 மற்றும் ஜூலை 8 மற்றும் 2021 அக்டோபர் 11-ஆம் தேதிக்கு இடையில்  Bank Simpanan Nasional மற்றும் Maybank இல் இக்குற்றப் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MACC சட்டம் 2009 இன் பிரிவு 25(1) இன் கீழ் ஹஸ்ரி மீது குற்றம் சாட்டப்பட்டது. இது அதிகபட்சமாக RM100,000 அபராதம் அல்லது 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்க வகை செய்கிறது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *