STEM – மாணவர்களின் ஆர்வத்தை அதிகரிக்க 100 பள்ளிகளில் பேச்சுவார்த்தை! - பிரதமர்

top-news
FREE WEBSITE AD


கோலாலம்பூர், ஜூலை 17: (STEM)  எனப்படும் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் ஆகியவற்றில் மாணவர்களின் ஆர்வத்தை அதிகரிக்க, 100 பயோடெக்னாலஜி விஞ்ஞானிகள் மற்றும்  100 பள்ளிகளில் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.

விஞ்ஞானிகள் மற்றும் பள்ளிகளின் பட்டியலைத் தயாரிக்கும் முயற்சிக்கு தலைமை தாங்கும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்பு அமைச்சர் சாங் லிஹ் காங்கிடம் அன்வார் கூறினார்.

STEM இல் இளைஞர்களின் ஆர்வத்தை ஈர்க்கும் திட்டங்களை அதிகரிக்க கல்வி அமைச்சுடன் நெருக்கமாக பணியாற்றுமாறு தாம் சாங்கிடம் கூறியதாக அன்வார் தெரிவித்தார்.

எனவே பயோடெக்னாலஜி நிறுவனங்கள், ஏஜென்சிகள் மற்றும் தொடர்புடைய அமைச்சுகளின் வல்லுநர்கள் மாதத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு முறை பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்குச் சென்று மாணவர்களுக்காக இரண்டு அல்லது மூன்று மணிநேரம் செலவிடுவார்கள் என்று  இன்று நடைபெற்ற தேசிய உயிர் பொருளாதார கண்காட்சி 2024 இல் அன்வார் இவ்வாறு கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *