தாமான் ஸ்ரீ மாவார் அருள்நிலைய ஆதரவுடன் மாநில அளவிலான திருமுறை ஓதும் விழா !

top-news
FREE WEBSITE AD

சிரம்பான். செப்.27-

மலேசிய இந்து தர்ம மாமன்றம் நெகிரி செம்பிலான் மாநில நடராஜ கோட்டம் ஏற்பாட்டில் தாமான் ஸ்ரீ மாவார் அருள்நிலைய ஆதரவுடன் மாநில அளவிலான திருமுறை ஓதும் விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது.சிரம்பான் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற பல்வேறு பிரிவுகளுக்கான இப்போட்டியில் நெகிரி செம்பிலான் மாநிலத்திலுள்ள ஏழு அருள் நிலையங்கள் தங்கள் போட்டியாளர்களை களமிறக்கின.

பல்வேறு பிரிவுகளுடன் நடைபெற்ற இப்போட்டியில் தனிநபர் திருமுறை ஒதும் போட்டியில், பிரணவன் திருநாவுக்கரசு, நிஷிகா ஜெகநாத், வினிஷா ஈஸ்வரன், சாங்ஹிஷாலினி சந்திரன், யோகதரணி ஆகியோர் முதல் நிலையில் வெற்றி பெற்றனர். இதனிடையே திருமுறை குழுப் போட்டியில் பண்டார் ஸ்பிரிங்ஹில் அருள் நிலையம் முதல் நிலையிலும், இரண்டாவது நிலையில் ஸ்ரீ மாவார் அருள் நிலையம், மூன்றாவது நிலையில் சிரம்பான் அருள் நிலைய குழுக்கள் வென்றன.

இதனிடையே குழு ரீதியான புதிர்ப் போட்டியில் பகாவ் அருள் நிலையம் வெற்றி பெற்ற வேளையில், இரண்டாம், மூன்றாம் இடங்களை லாபு அருள் நிலையம், ஸ்ரீ மாவார் அருள் நிலையம் வென்றன.பஞ்சபுராணம் பதிகப் பாராயணம் வாசித்தல் போட்டியில் தனிநபர் பிரிவில் பிரேம்குமார் மற்றும் யோகராணி சங்கம் ஆகியோர் முதல் நிலையில் வெற்றி பெற்ற வேளையில், பேச்சுப் போட்டியில் தனேஷ் முதல் நிலையில் வெற்றி பெற்றார்.

இப்போட்டியை நிறைவு செய்துவைத்து பேசிய சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி.குணா, இந்து சமூகத்தினரை சார்ந்த ஒவ்வொருவரும், அவர்கள் சார்ந்த சமய திருமுறைகளை தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதே வேளை சமய விழாக்களில் குடும்ப நிகழ்வுகளில் குறிப்பாக இறப்பு காரிய பிரார்த்தனைகளின் போது, சமய திருமுறை பாடலை பாட வெட்கப்படும் போக்கை முதலில் கைவிட வேண்டும் என குணா கேட்டுக்கொண்டார். இந்நிகழ்வில் சிறப்புரையாற்றிய மலேசிய இந்து தர்ம மாமன்ற தேசியத் தலைவர் ராதாகிருஷ்ணன். இடைநிலைப்பள்ளிகளில் இந்து மாணவர்களை மதம் மாற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தொடர் புகார்களை பெற்று வருகிறோம்.

இவ்விவகாரத்தில் பெற்றோர்கள் விழிப்பு நிலையில் இருக்க வேண்டும் என்றும், நமது பிள்ளைகளுக்கு இந்து சமய அறிவை புகுத்துவதில் பெற்றோர்கள் முழுக் கவனம் செலுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *