நான் அமைச்சராகமாட்டேன்! பி.கே.ஆர் உதவித் தலைவர் விளக்கம்!

top-news

ஜூன் 1,

பி.கே.ஆர் கட்சியின் தேர்தலில் தோல்வி அடைந்ததால் பொருளாதார அமைச்சர் Datuk Seri Rafizi Ramli, இயற்கை வளங்கள் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் Nik Nazmi Nik Ahmad அமைச்சர் பதவியிலிருந்து விலகியிருக்கும் நிலையில் பி.கே.ஆர் கட்சியின் உதவித் தலைவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டிய எந்த அவசியமும் இல்லை என பி.கே.ஆர் உதவித் தலைவரும் நெகிரி செம்பிலான் மாநில மெந்திரி பெசாருமான Datuk Seri Aminuddin Harun இன்று தெரிவித்தார்.

அமைச்சர் பதவியில் யார் அமர போகிறார்கள் என்பது எனக்கு தெரியாது, ஆனால் கண்டிப்பாக நான் அமைச்சராகமாட்டேன் என Datuk Seri Aminuddin Harun தெளிவுப்படுத்தினார். தற்போது மாநில மெந்திரி பெசாராகப் பொறுப்பில் இருக்கும் நான் அமைச்சராகவும் பொறுப்பேற்பது நியாயமாக இருக்காது என்றும் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் நான் சிறப்பாகச் செயல்படுகிறேன், ஆகையால் அமைச்சராகும் வாய்ப்பு எனக்கு இல்லை என Datuk Seri Aminuddin Harun தெரிவித்தார். அமைச்சர் பொறுப்பை நிர்ணயிக்க வேண்டியது பிரதமர் Datuk Seri Anwar Ibrahim பொறுப்பு. இதுவரையும் அன்வார் எடுத்த எந்தவொரு முடிவும் தவறாக முடிந்ததில்லை. இப்போது மிகுந்த சிந்தனைக்குப் பின்னர் அவர் முடிவு எடுக்கிறார் எனும் போது அந்த முடிவு உறுதியாகவும் நிலையானதாகவும் இருக்கும் என பி.கே.ஆர் உதவித் தலைவரும் நெகிரி செம்பிலான் மாநில மெந்திரி பெசாருமான Datuk Seri Aminuddin Harun நம்பிக்கை தெரிவித்தார்.

Datuk Seri Aminuddin Harun menegaskan beliau tidak akan dilantik sebagai menteri walaupun memegang jawatan Timbalan Presiden PKR. Beliau berkata bahawa tugasnya sebagai Menteri Besar Negeri Sembilan sudah mencukupi, dan pelantikan menteri adalah hak Perdana Menteri.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *