அப்பாவைக் கொடூரமாகத் தாக்கிய மகன் கைது!

top-news

ஜூன் 2,

அப்பாவுக்கும் மகனுக்குமான வாக்குவாதம் கைகலப்பில் முடிந்துள்ளது. 60 வயது அப்பாவை 23 வயது மகன் கொடூரமாகத் தாக்கிய பின்னர் 23 வயது இளைஞன் கைது செய்யப்பட்டிருப்பதாக Tawau, மாவட்டக் காவல் ஆணையர் Jasmin Hussin தெரிவித்தார். காலை 9.15 மணிக்கு இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் பொதுமக்களிடமிருந்து புகார் அழைப்பைப் பெற்றதும் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக Tawau, மாவட்டக் காவல் ஆணையர் Jasmin Hussin தெரிவித்தார்.

60 வயது முதியவர் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகவும் சம்மந்தப்பட்ட 23 வயது இளைஞர் Kampung Pitas குடியிருப்புப் பகுதியின் அருகில் உள்ள தொழில்சாலையில் காலை 10.30 மணிக்குக் கைது செய்யப்பட்டதாகவும் Tawau, மாவட்டக் காவல் ஆணையர் Jasmin Hussin தெரிவித்தார். கைது செய்யப்பட்ட 23 வயது இளைஞரிடம் எந்தவோர் அடையாள ஆவணங்களும் இல்லை என்பதால், 60 வயது முதியவரின் சிகிச்சைக்குப் பின்னர் விசாரணையைத் தொடர்வதாக Tawau, மாவட்டக் காவல் ஆணையர் Jasmin Hussin தெரிவித்தார்.

Seorang pemuda berusia 23 tahun ditahan selepas menyerang bapanya yang berusia 60 tahun dalam kejadian di Tawau. Mangsa dihantar ke hospital dalam keadaan tidak sedarkan diri. Suspek ditahan berhampiran sebuah kilang tanpa sebarang dokumen pengenalan diri.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *