பிக்-அப் வாகனங்களைக் களவாடும் கும்பல்- மூவர் சுட்டுக் கொலை, நால்வர் கைது!

top-news
FREE WEBSITE AD

அலோர்ஸ்டார், மே 7-

மலேசியாவிலிருந்து அண்டை நாடொன்றுக்கு எழுபதுக்கும் மேற்பட்ட பிக்-அப் வாகனங்களைச் கடத்திய கும்பலொன்றைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் உள்நாட்டைச் சேர்ந்த மூவரைப் போலீசார் சுட்டுக் கொன்றனர். மேலும், அக்கும்பலைச் சேர்ந்த நால்வரை அவர்கள் கைதுசெய்துள்ளனர்.

அவர்கள் தாய்லாந்துப் பிரஜைகள் ஆவர். தாய்லாந்துப் போலீசாரின் ஒத்துழைப்புடன் மலேசியாவில் பதிவுசெய்யப்பட்ட இரண்டு தொயோத்தா ஹைலக் வாகனங்களையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர் என்று புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத்துறையின் இயக்குநர் டத்தோஸ்ரீ முகமது ஷுஹாய்லி முகமது ஸைன் தெரிவித்தார்.

மலாக்கா, சிலாங்கூர். பகாங், பேராக் ஆகிய மாநிலங்களில் தொடர்ச்சியாக பிக்-அப் வாகனங்கள் களவாடப்பட்டு வருவதைத் தொடர்ந்து, உளவுத்தகவல்களின் அடிப்படையில் செயல்பட்ட கூட்டுப் போலீஸ் குழுவொன்று கெடாவின் சிக், தாமான் செஜாத்ராவில் "ஹோம்ஸ்டே" வீடொன்றை வியாழக்கிழமை அதிகாலை 2.30மணிக்கு முற்றுகையிட்டனர் என்று ஷூ ஹாய்லி சொன்னார்.

அம்முற்றுகையின்போது அவ்வீட்டின் பிரதான படுக்கையறையில் இருந்த இரண்டு ஆடவர்கள் போலீஸ்காரர்களை நோக்கிச் சுட்டனர். மற்றொரு அறையிலிருந்து கத்தியுடன் வந்த மூன்றாவது நபர் போலீஸ்காரர்களைத் தாக்க முயன்றான். தற்காப்புக்காக அவனையும் போலீசார் சுட்டு வீழ்த்தினர் என்று கெடா போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.

சந்தேகப் பேர்வழிகளிடமிருந்து தோட்டாக்கள் நிரப்பப்பட்ட இரண்டு கைத்துப்பாக்கிகள்,ஒரு பாராங் கத்தி போன்றவை கைப்பற்றப்பட்டன. இருபத்தேழு வயதுக்கும் முப்பது வயதுக்கும் இடைப்பட்ட அவர்கள், நெகிரி செம்பிலான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். போதைப்பொருள் குற்றங்கள் உட்பட பல குற்றச்செயல்களில் அவர்கள் சம்பந்தப்பட்டிருந்தனர் என்று ஷு ஹாய்லி சொன்னார்.

கடந்த மாதம் பெட்டாலிங் ஜெயாவிலிருந்து களவாடிய ஹோண்டா சிஆர்-வி காரில் அவர்கள் பயணம் செய்துள்ளனர். அக்காரில் 26 போலி பதிவு எண்பட்டைகள் காணப்பட்டன. கடந்த 2023ஆம் ஆண்டிலிருந்து 73 பிக்-அப் வாகனங்களை அவர்கள் களவாடியுள்ளனர். அவற்றில் 18 வாகனங்கள் இவ்வாண்டு ஜனவரிக்கும் ஏப்ரலுக்கும் இடையில் மலாக்காவில் களவாடப்பட்டவை ஆகும்.

அன்றைய தினமே பிற்பகல் 3மணிக்கு மேற்கொள்ளப்பட்ட மற்றொரு நடவடிக்கையில் தாய்லாந்தின் சொங்லா மாவட்டத்தின் சபாயோல் மாவட்டத்தில் மலேசியாவில் பதிவான இரண்டு தொயோத்தா ஹைலக் வாகனங்கள் கைப்பற்றப்பட்டன. அதன் தொடர்பில் நான்கு தாய்லாந்துப் பிரஜைகள் கைதுசெய்யப்பட்டனர்.

Polis menembak mati tiga warga tempatan disyaki ahli sindiket curi kenderaan yang melibatkan lebih 70 pacuan empat roda ke Thailand, dan menahan empat warga Thailand serta merampas dua Toyota Hilux hasil kerjasama polis Thailand.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *