டாங்கி அருள்மிகு ஸ்ரீ நாகராணி பேச்சியம்மன் ஆலய வளர்ச்சிக்கு ரி.ம 70,500 மானியம்!
- Muthu Kumar
- 23 Sep, 2024
கோலப்பிலா செப்.23-
டாங்கி வட்டாரத்தில் எழுந்தருளியுள்ள பழைமையான ஆலயங்களில் ஒன்றான அருள்மிகு ஸ்ரீ நாகராணி பேச்சியம்மன் ஆலய வளர்ச்சிக்கு வீடமைப்பு மற்றும் புறநகர் அமைச்சின் வாயிலாக ரி.ம 70, 500 மானியம் வழங்கப்பட்டுள்ளது. டாங்கி பகுதியில் அமைந்துள்ள இந்த ஆலயத்திற்கான மானியம் ரெப்பா சட்டமன்ற உறுப்பினரும், மாநில ஆட்சிக்குழு உறுப்பினருமான எஸ்.வீரப்பன் ஆதரவில் கிடைக்கப்பட்டதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
மானியம் பெறுவதற்கான முயற்சியில் ஆலயம் முன்னெடுத்து அனுப்பிய மனுவை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்ட பின்னர் வீடமைப்பு புறநகர் அமைச்சர் ஙா கோர் மிங் ஆலய மானியத்திற்குப் பரிந்துரைத்து அவரது வாயிலாக கிடைக்கப் பெற்றதில் மகிழ்ச்சி அடைந்ததாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
ரெப்பா சட்டமன்ற உறுப்பினர் எஸ்.வீரப்பன் மற்றும் அமைச்சர் ஙா கோர் மிங் இருவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினர் தெரிவித்தனர். கிடைக்கப் பெற்ற இந்த மானியம் ஆலய வளர்ச்சிக்குப் பயன்படுத்தப்படும் என்று ஆலய நிர்வாகத்தினர் கருத்துரைத்தனர்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *