டான்ஸ்ரீ அப்துல் காதிர் முகமட் காலமானார்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூலை 15: முன்னாள் வெளியுறவு அமைச்சகத்தின் பொதுச் செயலாளர் டான்ஸ்ரீ அப்துல் காதிர் முகமட், சிலாங்கூர் சைபர்ஜெயாவில் உள்ள அவரது இல்லத்தில் இன்று முதுமை காரணமாக தமது 81-வது வயதில் காலமானார்.

அவருக்கு புத்ராஜெயா மசூதியில் இறுதிச் சடங்குகள் நடைபெறும், அதைத் தொடர்ந்து புத்ராஜெயாவின் 20-வது பகுதியில் உள்ள தேசிய கல்லறையில்  அவரது நல்லுடல் அடக்கம் செய்யப்படும்.

அப்துல் காதிர் 1996 முதல் 2001 இல் ஓய்வு பெறும் வரை வெளியுறவு அமைச்சின் பொதுச் செயலாளராக பணியாற்றினார்.

அவர் 1968 இல்  மலேசிய இராஜதந்திர சேவையில்  சேர்ந்தார் மற்றும் கோலாலம்பூரில் உள்ள அமைச்சகத்திலும், நியூயார்க், சைகோன், பிரஸ்ஸல்ஸ், வாஷிங்டன் மற்றும் இஸ்லாமாபாத் ஆகிய இடங்களில் உள்ள மலேசிய தூதரகப் பணிகளிலும் பல்வேறு பதவிகளை வகித்தார்.

 ஓய்வு பெற்ற பிறகு, வெளியுறவு அமைச்சில் தூதராக மீண்டும் நியமிக்கப்பட்டார். இந்தோனேசியாவுடனான தகராறில் Pulau Ligitan மற்றும் Pulau Sipadan வழக்கைத் தயாரிப்பதில் மலேசிய அணியின் தலைவராக அவர் முக்கிய பங்கு வகித்தார்.

சர்வதேச நீதிமன்றத்தில் (ICJ) மலேசியாவின் முகவராக, அவர் மலேசியாவின் வழக்கை வெற்றிகரமாக வாதிட்ட சட்டக் குழுவை வழிநடத்தினார், இதன் விளைவாக 2002 இல் உலக நீதிமன்றத்தில் சாதகமான முடிவு கிடைத்தது.

அக்டோபர் 31, 2003 அன்று டத்தோஸ்ரீ அப்துல்லா அகமட் படாவி பிரதமராக பதவியேற்றபோது அவர் மலேசியப் பிரதமரின் வெளியுறவுத்துறை ஆலோசகராகப் பணியாற்றினார்.

2007 ஆம் ஆண்டில், புலாவ் பத்து பூத்தே, மிடில் ராக்ஸ் மற்றும் சவுத் லெட்ஜ் ஆகியவற்றின் இறையாண்மை உரிமை தொடர்பாக சிங்கப்பூருடனான சர்ச்சையில் ICJ இல் மலேசியாவை அதன் முகவராக அப்துல் காதிர் பிரதிநிதித்துவப்படுத்தினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *