அன்வார் புத்திசாலி! அன்வாருக்கு அழுத்தம் கொடுக்காதீர்! – Anthony Loke

top-news

மே 31,

பி.கே.ஆர் தேர்தலுக்குப் பின்னர் பொருளாதார அமைச்சர் Datuk Seri Rafizi Ramli இயற்கை வளங்கள் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை அமைச்சர் Nik NAzmi Ahmad இருவரும் அமைச்சர் பதவியிலிருந்து விலகியிருப்பது அமைச்சரவையில் சிக்கலை ஏற்படுத்தியிருந்தாலும் பிரதமர் அன்வார் தகுதியான முடிவை எடுப்பார் என டி.ஏ.பி கட்சியின் பொதுச் செயலாளரும் போக்குவரத்து அமைச்சருமான Anthony Loke கருத்து தெரிவித்தார். கூட்டணி கட்சிகளாக இருந்தாலும் மற்ற கட்சிகளின் உள்விவகாரங்களில் டி.ஏ.பி தலையிடாது என்பதைதும் Anthony Loke நினைவூட்டினார்.

அதே வேளையில் அமைச்சரவை குறித்தான முழுமையானப் புரிதலையும் அனுபவத்தையும் பிரதமர் அன்வார் கொண்டிருப்பதால் அமைச்சர்கள் விலகியது குறித்தான சிறந்த முடிவுகளை அன்வார் எடுப்பார் என்றும் அன்வாருக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுக்காமல் இருந்தால் புத்திசாலியான அன்வார் தகுதியான முடிவை எடுப்பார் என்றும் Anthony Loke தெரிவித்தார். தற்போது TENGKU ZAFRUL அமைச்சர் பதவி குறித்தும் சர்ச்சைகள் எழுந்திருக்கும் நிலையில் விரைந்து அமைச்சரவைக் கூட்டம் நடத்தப்படும் என்றும் அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் அன்வார் விளக்கமளிப்பார் என்றும் Anthony Loke நம்பிக்கை தெரிவித்தார்.

Anthony Loke menyokong kebijaksanaan Perdana Menteri Anwar Ibrahim dalam menangani isu peletakan jawatan dua menteri. Beliau menegaskan DAP tidak campur urusan dalaman PKR dan percaya Anwar akan buat keputusan terbaik tanpa tekanan luar.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *