இணைய அச்சுறுத்தல் சிக்கலுக்குத் தீர்வு காண சிறப்புக் குழு! - அமைச்சரவை ஒப்புதல்
- Shan Siva
- 19 Jul, 2024
கோலாலம்பூர், ஜூலை 19: நாட்டில் இணைய
அச்சுறுத்தல் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண ஒரு சிறப்புக் குழுவை அமைக்க
இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டதாக தகவல் தொடர்பு
அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்தார்.
தகவல் தொடர்பு அமைச்சு, உள்துறை அமைச்சு, இலக்கவியல் அமைச்சு
மற்றும் பிரதமர் துறையின் சட்ட விவகாரப் பிரிவு ஆகியவை இந்தக் குழுவில் இடம்பெறும் என்று ஒற்றுமை
அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளருமான ஃபஹ்மி கூறினார்.
தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையமான
MCMC , அரச மலேசிய காவல்துறை
மற்றும் சட்டத்துறை அலுவலகம் அடங்கிய சிறப்புக் குழுவும், இக்குழுவுக்கு ஆதரவளிக்கும்
என்று அவர் கூறினார்.
“சைபர்புல்லிங் பிரச்சினைகளில்
சமூக ஊடக தளங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று
அமைச்சரவை கருதுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.
"எனவே, சட்ட அம்சங்களைப் பற்றி விரிவாகப் பார்ப்போம் மற்றும் (சட்டங்களில்) திருத்தங்களைச் செய்வோம். அத்துடன் இணைய அச்சுறுத்தல் தொடர்பான சிக்கல்களைக் கையாள்வது அவசியம் என்று நாங்கள் நினைக்கிறோம்," என்று அவர் பெர்னாமாவிடம் கூறினார்.
.
ஏனென்றால் சைபர்புல்லிங்
சிக்கல்களில் புதிய சமூக ஊடக தளங்கள், இதுவரை
தோன்றாத தளங்கள் மற்றும் AI (செயற்கை நுண்ணறிவு)
தொழில்நுட்பம் ஆகியவை அடங்கும். எனவே அதைச் சமாளிக்க தொழில்நுட்ப அம்சம் உட்பட
எங்களிடம் உள்ள அனைத்து நிபுணத்துவத்தையும் நாங்கள் திரட்ட வேண்டும் என்று அவர் கூறினார்.
அதே நேரத்தில், இணைய மிரட்டல் பிரச்சினைகளை கூட்டாகக் கையாள்வதில்
மற்ற அமைச்சுகளின் ஒத்துழைப்பையும் ஈடுபாட்டையும் அவர்கள் வெளிப்படையாக
வரவேற்பதாகவும் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *