பால் ஹாரிஸ் ஃபெலோ” என்ற உயரிய விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டார் டத்தோ ஙே கூ ஹாம்!

top-news
FREE WEBSITE AD

(ஆர்.கிருஷ்ணன்)

ஈப்போ, மே 31-

பல்லாண்டுகளாக செயல்படும் ஈப்போ ரோட்டரி கிளப்பிற்கு 10 ஆயிரம் ரிங்கிட் நிதியுதவி வழங்கி உதவினார் புருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினரும். ஜசெக வின் தேசிய பொருளாளருமாகிய டத்தோ ஙே கூ ஹாம்.அவரின் மக்கள் சேவை மற்றும் கட்சியை சிறப்பாக வழிநடத்தும் நிர்வாக திறமையை அடிப்படையாகக் கொண்டு அவருக்கு ஈப்போ ரோட்டரி கிளப் "பால் ஹாரிஸ் ஃபெலோ' என்ற உயரிய விருதை வழங்கி கௌரவித்தனர்.

இந்நாட்டில் பல இயக்கங்கள் அரசியல்வாதிகளுடன் ஒன்றிணைந்து மக்களுக்கு சேவையாற்றி வருகின்றன. அரசியல் கட்சிகளை விட இத்தகைய இயக்கங்கள் மக்கள் நலன் கருதி தன்னலமற்ற முறையில் சேவையாற்றி வருவது மிகவும் பாராட்டப்பட வேண்டிய விசயமாகும் என்று டத்தோ ஙே கூ ஹாம் கூறினார்.அத்துடன், தற்போது இ- காசே திட்டம் வாயிலாக மக்களுக்கு உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தை அரசாங்கம் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்பது மிகவும் முக்கியமாகும் என்று அவர் கருத்துரைத்தார்.அதுமட்டுமன்றி, எங்களது ஜசெக கட்சியில் இளைய தலைமுறையினருக்கு வாய்ப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இளைஞர்கள் அடுத்த தலைவர்கள், அதன் அடிப்படையில் அவர்களுக்கு வழிகாட்டியாக செயல்படுவது மிக அவசியமாகும். அதனால், இளைய சமூகத்தினர் ஜசெக வில் சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக செயல்பட்டு வருவதை அவர் சுட்டிக்காட்டினார். நிறைவுவிழாவில், டத்தோ ஙே கூ ஹாம்மிற்கு விருது வழங்கி சிறப்பித்தனர். அத்துடன் வருகையாளர்களுக்கு பிரியாணி உணவு வழங்கப்பட்டது. தொழிலதிபர் மார்டின் இந்நிகழ்வை சிறப்பாக வழிநடத்தினார்.

Dato’ Nga Kor Ham dianugerahkan gelaran “Paul Harris Fellow” oleh Ipoh Rotary Club atas sumbangan RM10,000 dan kepimpinan cemerlangnya. Beliau menekankan pentingnya gerakan sosial serta peranan belia dalam politik dan sokongan berterusan kepada program eKasih.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *