நாட்டின் முக்கிய நுழைவு மையங்களில் AI 'பேக்கேஜ் ஸ்கேனிங்'

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், செப் 28: நாட்டின் முக்கிய நுழைவு மையங்களில் பாதுகாப்புக் கட்டுப்பாடுகளை வலுப்படுத்த செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் கூடிய 40 அதிநவீன 'பேக்கேஜ் ஸ்கேனிங்' இயந்திரங்கள் நிறுவப்பட்டுள்ளதாக தேசிய சுங்கத் துறை இயக்குநர்  அனிஸ் ரிசானா ஜைனுடின் தெரிவித்தார்.

மே மற்றும் ஜூன் மாதங்களில் நிறுவப்பட்ட இந்த ஸ்கேனர்கள், கடத்தப்படும்  மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களை அடையாளம் காண சுங்கத் துறையின் திறனை மேம்படுத்தும் என்று அவர் கூறினார்.

இந்த இயந்திரங்கள் துல்லியமான தரவை வழங்கும் என்பதோடு, கசிவுகளைக் குறைப்பதற்கும் அரசாங்க வருவாயை அதிகரிப்பதற்கும்  உதவும் என்று அவர் கூறினார்.

KLIA அஞ்சல் மற்றும் கூரியர் மையத்தில் RM 577,000  மதிப்புள்ள கஞ்சா கைப்பற்றப்பட்டதை கண்டறிய இந்த ஸ்கேனர்கள் உதவியதாக அனிஸ் ரிசானா கூறினார்.

பயணிகளின் உடலில் அல்லது உள்ளே மறைத்து வைக்கப்பட்டுள்ள பொருட்களை கண்டறியும் உடல் ஸ்கேனர்களையும் சுங்கத்துறை வாங்கியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

பயணிகள் இடைநிறுத்தப்படாமல் இயந்திரங்களை கடந்து செல்ல முடியும் என்பதால் இத்தொழில்நுட்பம் விரைவான ஆய்வுகளை அனுமதிக்கும் என்று அவர் குறிப்பிட்டார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *