பாரிசானுக்குத் துரோகம் இழைத்தால் பின்விளைவுகள் பயங்கரமாக இருக்கும்! – அம்னோ எச்சரிக்கை

top-news
FREE WEBSITE AD

அம்னோவிலிருந்து விலகி பாஸ் கட்சியில் இணைந்திருக்கும் மலாக்கா REMBIA சட்டமன்ற உறுப்பினரான Datuk Muhammad Jailani Khamis மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என UMNO பொதுச் செயலாளர்  Datuk Dr Asyraf Wajdi Dusuki தெரிவித்தார். முன்னதாக மலாக்கா சட்டமன்றத் தேர்தலின் போது அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களிடமிருந்தும் கட்சி ஒப்பந்தத்துவ உடன்படிக்கையில் கையொப்பம் பெறப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

அந்த ஒப்பந்தத்தின்படி கட்சியிலிருந்து வெளியேறும் ஆட்சியாளர்கள் மீது சட்டநடவடிக்கையும் 100 மில்லியன் வரையில் அபராதமும் விதிக்கப்படும் என குறிப்பிட்டிருப்பதாக UMNO பொதுச் செயலாளர்  Datuk Dr Asyraf Wajdi Dusuki எச்சரித்தார்.  இந்த ஒப்பந்தம் அம்னோ உறுப்பினர்களுக்கு மட்டுமில்லை, பாரிசான் உறுப்புக் கட்சிகளான MALAYSIAN INDIAN CONGRESS எனும் MIC, Malaysian Chinese Association எனும் ம.சீ.ச ஆகிய உறுப்புக் கட்சிகளுக்கும் இது பொறுந்தும் என்றும் மேலும் பல்வேறு சாரம்சங்கள் கொண்டுள்ள உடன்படிக்கைகளும் உள்ளடங்கியிருப்பதாக அவர் தெரிவித்தார். 

ஆதலால் பாரிசானில் அங்கம் வகிக்கும் கட்சிகளுக்கும் பாரிசான் ஆதரவில் தேர்தலில் வெற்றிப்பெற்ற ஆட்சியாளர்களுக்கும் இது குறித்து முழுமையாக தெரியும் என்பதனால் பாரிசானுக்கு எதிராக ஏதேனும் மனப்போக்கைக் கொண்டிருந்தால் அதனைச் செயல்படுத்தும் முன்னர் உடன்படிக்கையை நினைவில் கொள்ளும்படியும் குறிப்பிட்ட உடன்படிக்கையால் தங்களின் அரசியல் வாழ்க்கை முடிவுக்கு வரும் என்பதையும் UMNO பொதுச் செயலாளர்  Datuk Dr Asyraf Wajdi Dusuki  நேரடியாக எச்சரித்துள்ளார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *