19 பயணிகளன் பேருந்து விபத்துக்குள்ளானது!

- Sangeetha K Loganathan
- 02 Jun, 2025
ஜூன் 2,
குவா மூசாங்கிலிருந்து கோலாலம்பூருக்குச் செல்லும் சாலையில் கட்டுப்பாட்டை இழந்த பயணிகள் பேருந்து விபத்துக்குள்ளனாது. 19 பயணிகளுடன் கோலாலம்பூர் நோக்கி சென்றுக் கொண்டிருந்த பேருந்து சாலையோரம் கட்டுமானப் பணிக்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த இரும்புகளை மோதி விபத்துக்குள்ளானதாக Gua Musang மாவட்டக் காவல் ஆணையர் SIK CHOON FOO தெரிவித்தார். நண்பகல் 1.40 மணிக்கு விபத்துக் குறித்தான அவசர அழைப்பைப் பெற்றதாகவும் மீட்புப் படையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக Gua Musang மாவட்டக் காவல் ஆணையர் SIK CHOON FOO தெரிவித்தார்.
57 வயது பேருந்து ஓட்டுநரின் கவனக் குறைவால் இந்த விபத்து ஏற்பட்டிருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. பேருந்தில் பயணித்த 19 பயணிகளும் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் பயணிகளுக்கு எந்தவொரு காயமும் ஏற்படவில்லை என்றும் பேருந்து ஓட்டுநல் சிராய்ப்புக் காயங்குள்ளானதாகவும் Gua Musang மாவட்டக் காவல் ஆணையர் SIK CHOON FOO தெரிவித்தார். மற்றொரு பயணிகள் பேருந்தின் மூலமாக 19 பயணிகளும் கோலாலம்பூருக்குப் பயணத்தைத் தொடர்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sebuah bas yang membawa 19 penumpang dari Gua Musang ke Kuala Lumpur terlibat dalam kemalangan selepas melanggar timbunan besi binaan di tepi jalan. Tiada penumpang mengalami kecederaan serius, manakala pemandu mengalami kecederaan ringan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *