நாட்டில் உடல் பருமன் பிரச்னை அதிகரித்துள்ளது! - சுகாதார அமைச்சர் தகவல்

top-news
FREE WEBSITE AD

பெட்டாலிங் ஜெயா, ஜூலை 18 : நாட்டில் குழந்தைகள் மற்றும் பெரியவர்களிடையே உடல் பருமன் அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு (MoH) தெரிவித்துள்ளது.

 

மேலும், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் வளர்ச்சி குன்றியிருப்பது 2015 இல் 17.7% ஆக இருந்து 2022 இல் 21.2% ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சூல்கிஃப்ளி அஹ்மட் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

 

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே உடல் பருமன் பாதிப்பு 2015 இல் 4% இலிருந்து 2019 இல் 5.6% ஆகவும் 2022 இல் 6% ஆகவும் அதிகரித்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

 

10 முதல் 17 வயதுக்குட்பட்ட மாணவர்களிடையே அதிக எடையின் பாதிப்பு 2012 இல் 14.6% ஆக இருந்து 2017 இல் 15.6% ஆக அதிகரித்துள்ளது.

 

இதற்கிடையில், உடல் பருமனின் பரவலானது 2012 இல் 12.3% இல் இருந்து 2017 இல் 14.8% ஆக உயர்ந்துள்ளது. பள்ளி மாணவர்களில் மூன்றில் ஒருவர் அதிக எடை அல்லது பருமனாக இருப்பதாக இந்தத் தரவு காட்டுகிறது.

 

பெரியவர்களிடையே உடல் பருமன் பாதிப்பு 2019 இல் 19.7% இல் இருந்து 2023 இல் 21.8% ஆக அதிகரித்துள்ளது" என்று அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *