அம்னோ பி.கே.ஆர் உறவில் விரிசலா? அம்னோ தரப்பின் விளக்கம்!

top-news

மே 31,

ஒற்றுமை அரசாங்கத்தின் பிரதானக் கட்சியாக இருக்கும் பி.கே.ஆர் கட்சிக்கும் அம்னோவுக்கும் இடையிலான உறவில் விரிசல் இருப்பதாகவும் கருத்து மோதல்கள் இருப்பதாகவும் வெளிவரும் செய்திகளில் பாதி உண்மை பாதி பொய் என அம்னோ உதவித் தலைவரும் அமைச்சருமான Datuk Seri Johari Abdul Ghani தெரிவித்தார். உண்மையில் 100% கருத்து முரண்கள் இல்லாமல் எந்த கட்சியின் கூட்டணியும் இருக்காது என்பதை அவர் தெளிவுப்படுத்தினார்.

அதேவேளையில் 50% கருத்து முரண்களுடன் எந்த கட்சியின் கூட்டணியும் நிலைக்காது என Datuk Seri Johari Abdul Ghani தெரிவித்தார். பல நேரங்களில் ஒன்றிணைந்து புரிந்துணர்வோடும், சில நேரங்களில் வலுவாக எதிர்த்தும் கொள்கையை நிலைநிறுத்தவும் வேண்டியிருக்கும் என்பதை Datuk Seri Johari Abdul Ghani வலியுறுத்தினார். ஆனால் அம்னோ தனது வரலாற்றில் யாருக்கும் துரோகம் இழைத்ததில்லை என்றும் நம்பிக்கையைக் காப்பாற்றும் ஒரு கட்சியாக அம்னோ இருப்பதை உறுதிச் செய்வோம் என்றும் Datuk Seri Johari Abdul Ghani தெரிவித்தார்.

Datuk Seri Johari Abdul Ghani menolak dakwaan perpecahan antara UMNO dan PKR, menyifatkannya sebagai separuh benar. Beliau menegaskan perbezaan pandangan adalah lumrah dalam kerjasama politik dan UMNO kekal komited kepada prinsip serta gabungan kerajaan.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *