தலைநகரில் 6 அழகு நிலையங்களை DBKL மூடியது!

top-news

ஜூன் 1,

தலைநகரில் உள்ள ஒரு வணிகத் தளத்தில் முறையான அனுமதியில்லாமல் இயங்கி வந்த 6 அழகு நிலையங்களில் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் நிரந்தரமாக மூட உத்தரவிட்டுள்ளது. BUKIT BINTANG அங்காடித் தளத்தில் இயங்கி வந்த 6 அழகு நிலையங்களும் வர்த்தகத்திற்கான உரிமைகள் இல்லாமல் செயல்பட்டு வந்ததாக முதற்கட்ட சோதனையில் தெரிய வந்துள்ளது. நேற்று மாலை இச்சோதனையை மேற்கொண்ட கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் சம்மந்தப்பட்ட அழகு நிலையங்களை மூடியதுடன் 13 சம்மன்கள் வழங்கியதாகத் தெரிவித்துள்ளது.

சுமார் 6 மாதங்களுக்கும் மேலாக அந்த அழகு நிலையங்கள் செயல்பட்டு வந்த நிலையில் சுகாதாரமற்ற ஒப்பனை திரவங்களைப் பயன்படுத்தியதாகவும் அங்கீகரிக்கப்படாத அழகு சாதனப் பொருள்களை விற்பனை செய்ததாகவும் தகுதியற்ற ஒப்பனை கலைஞர்களைப் பணிக்கு அமர்த்தியது போன்ற குற்றங்களில் ஈடுபட்டதாகத் தெரிய வந்துள்ளது. சம்மந்தப்பட்ட அழகு நிலையங்கள் போலி ஆவணங்களின் மூலமாக வணிகக் கடைகளை நடத்தியிருப்பதைக் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் உறுதிச் செய்துள்ளது.

DBKL menutup enam pusat kecantikan di Bukit Bintang kerana beroperasi tanpa lesen sah, menggunakan produk kosmetik tidak diluluskan, menggaji pekerja tanpa kelayakan, serta menggunakan dokumen palsu. Tindakan ini diambil selepas pemantauan dan siasatan berterusan pihak berkuasa.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *