SEGAMBUT பகுதியில் அதிகரிக்கும் வெளிநாட்டுப் பணியாளர்கள்! - DBKL அதிரடி!
- Thina S
- 26 Sep, 2024
Segambut பகுதியில் சட்டவிரோதமாக இயங்கி வந்த 4 வணிகத்தளங்களைக் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் (DBKL) மூடியது, சம்மந்தப்பட்ட வணிகத்தளங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டதுடன் வணிகப்பொருள்களையும் பறிமுதல் செய்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வணிக உரிமம் இல்லாதது, சுகாதாரமற்ற நிலையில் பராமரிக்கப்படாமல் இருந்தது, உரிமம் இல்லாத வெளிநாட்டினர்களைப் பணிக்கு அமர்த்தியது என 11 குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் (DBKL) தெரிவித்துள்ளது.
SEGAMBUT சுற்றுவட்டாரத்தில் இது மாதிரி உரிமம் பெறாத வணிகத்தளங்கள் வெளிநாட்டினர்களின் உதவியுடன் உள்ளூர் வணிகர்கள் நடத்தி வருவது தொடர்பானப் புகார்கள் அதிகரித்து வருவதாகக் கோலாலம்பூர் நகராண்மைக் கழகம் (DBKL) தெரிவித்துள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *