மற்றவர்களை மிதித்து நான் மேலே உயரவில்லை! – ஜாஹிட்

top-news
FREE WEBSITE AD


மூவார், ஜூலை 14: 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள கட்சித் தேர்தலின் போது அம்னோ தலைவர் பதவிக்கு தாம் சவால் விடத் தயாராக இருப்பதாக அதன் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி கூறுகிறார்.

எவ்வாறாயினும், அதை அம்னோ உச்ச மன்றம் மற்றும் கட்சியின் பொதுச் சபைக்கு விட்டுவிடுவதாக அவர் கூறினார்.

 அம்னோ அரசியலமைப்பின் படி, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்சித் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும், அதாவது அடுத்த தேர்தல் 2026ல் நடைபெறும்.

தலைமைத் தேர்தலை 18 மாதங்களுக்கு ஒத்திவைக்கலாம் என்று ஒரு ஷரத்து அம்னோ அரசியலமைப்பில்) உள்ளது,. அதாவது உச்ச மன்றம் மற்றும் பொதுக்குழுவின் முடிவைப் பொறுத்தது.

இதனிடையே இன்று நடைபெற்ற மூவார் அம்னோ பிரிவுக் கூட்டத்திற்குப் பிறகு, அம்னோவில் உள்ள தாங்கள் கட்சியின் அரசியலமைப்பு மற்றும் விதிமுறைகளில் கூறப்பட்டுள்ளதைக் கடைப்பிடிக்கிறோம் என்று கூறினார்.

அம்னோ மற்றும் பாரிசான் நேஷனல் ஆகியவற்றின் தொடர்ச்சியை வலுப்படுத்தவும் உறுதிப்படுத்தவும் கூடிய ஒருவரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை பிரதிநிதிகளுக்கு விட்டுவிடுகிறேன் என்று அவர் கூறினார்.

அஹ்மட் ஜாஹிட், தாம் ஏழு ஆண்டுகளாக அம்னோ தலைவராக இருந்ததாகவும், கட்சியின் முன்னாள் தலைவர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக்கால் தமக்கு அந்தப் பதவி வழங்கப்பட்டது என்றும் கூறினார்.

அப்போது தான் துணைத் தலைவராக இருந்தேன். போஸ்கு பதவி விலகியதும் கட்சித் தலைவர் பொறுப்பை தன்னிடம் கொடுத்தார் என்று ஜாஹிட் கூறினார்.

மற்றவர்களை மிதித்து நான் மேலே உயரவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்!

 

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *