கடலில் மூழ்கி உயிரிழந்த பதின்ம வயது சகோதரர்கள்!

- Sangeetha K Loganathan
- 03 Jun, 2025
ஜூன் 3,
குடும்பத்துடன் கடற்கரையில் குளித்துக்கொண்டிருந்த போது கடல் அலையில் மூழ்கிய சகோதரர்கள் இருவர் சடலமாக மீட்கப்பட்டனர். மாலை 4.25 மணியளவில் மெர்சிங்கில் உள்ள Pulau Mentigi கடற்கரையில் இருவர் மூழ்கியதாகப் பொதுமக்களிடமிருந்து அவசர அழைப்பைப் பெற்றதும் கடல்சார் பாதுகாப்பு அதிகாரிகள் தேடுதல் பணியை மேற்கொண்டதாக மெர்சிங் கடல்சார் பாதுகாப்பு ஆணையத்தின் தளபதி Suhaizan Saadin தெரிவித்தார்.
கடலில் மூழ்கிய 15 வயதான Nur Awatif Udaima Mohd Hisam எனும் இளைஞர் அடுத்த 5 நிமிடத்தில் மயக்க நிலையில் மீட்கப்பட்டதாகவும் பின்னர் சுகாதார அதிகாரிகளால் அவர் உயிரிழந்தது உறுதிச் செய்யப்பட்டதாகவும் மெர்சிங் கடல்சார் பாதுகாப்பு ஆணையத்தின் தளபதி Suhaizan Saadin தெரிவித்தார். மற்றொரு 13 வயது Ahmad Uwais எனும் சிறுவன் மாலை 6.30 மணிக்குக் கடலிலிருந்து சடலமாக மீட்கப்பட்டதாக மெர்சிங் கடல்சார் பாதுகாப்பு ஆணையத்தின் தளபதி Suhaizan Saadin தெரிவித்தார்.
Dua remaja beradik berusia 15 dan 13 tahun lemas ketika mandi bersama keluarga di Pantai Pulau Mentigi, Mersing. Mayat mereka ditemui masing-masing pada jam 4.30 petang dan 6.30 petang oleh pihak berkuasa maritim.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *