பள்ளிகளுக்கு தொழில்நுட்பத் திட்டங்கள் அவசியம்! - கல்வியமைச்சரின் சிறப்பு அதிகாரி தியாகராஜ் சங்கரநாராயணன்

top-news
FREE WEBSITE AD


போர்ட்டிக்சன், ஜூலை 17: SJKT போர்ட் டிக்சன் தமிழ்ப்பள்ளிக்கு கல்வி அமைச்சரின் சிறப்பு அதிகாரி தியகராஜ் சங்கர நாராயணன் சிறப்பு வருகை மேற்கொண்டார்.

கல்வித் திறனைக் கண்டறிவதும், பள்ளி வசதிகளை ஆய்வு செய்வதுமே இந்தப் பயணத்தின் நோக்கம் என்று அவர் கூறினார்.

தலைமையாசிரியர்  ராமசாமியுடனான சந்திப்பில், பள்ளியைப் பற்றிய தகவல் தனக்குத் தெரிவிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

இந்தப் பள்ளியில் மாணவர்கள் வீடியோக்களை பதிவு செய்யவும்,  தொகுக்கவும் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட 'கிரீன் ஸ்டுடியோ' இருப்பது சிறப்பு என்றும், இந்த உள்கட்டமைப்பு கல்வி அமைச்சு மற்றும் அரசின் மடானி திட்டத்திற்கேற்ப அமைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

பள்ளியின்  பெற்றோர் ஆசிரியர் சங்கம் மூலம் பல்வேறு தரப்பினரும் பங்களித்துள்ளனர். மேலும், ஆசிரியர்களின் வழிகாட்டுதலுடன் PPKI வகுப்புகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன என்று அவர் குறிப்பிட்டார்.

குழந்தைகளின் சிறப்பை வடிவமைக்க கல்வி அமைச்சர் ஃபாத்லினா சிடேக் சொல்வது போல் இது போன்ற தொழில் நுட்பத் திட்டங்கள் மிக அவசியம் என்று தியாகராஜ் சங்கர நாராயணன் வலியுறுத்தினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *