முதியோர் நலன் காப்பு சுகாதார திட்டத்தை சிலாங்கூர் தொடங்கி உள்ளது!

- Muthu Kumar
- 01 Jun, 2025
கோம்பாக், ஜூன் 1-
சிலாங்கூர் அரசாங்கம் முதியோர் நலன்காப்பு சுகாதார திட்டத்தை ஆரம்பித்துள்ளது. அதன் வழி அபாயங்களைக் கண்டறிவதற்கும் பலவீனமான முதியோருக்கு ஏற்படும் முக்கியமான சுகாதார சிக்கல்களைத் தடுக்கும் ஓர் ஆரம்ப நடவடிக்கையாக அறிமுகப்படுத்தியது.
3, 000 முதியவர்களுக்கு இலவச சுகாதார பரிசோதனைகளை வழங்குவதை இலக்காகக் கொண்டு மாநிலம் முழுவதும் ஒன்பது மாவட்டங்களில் 22 இடங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று பொது சுகாதார எக்ஸ்கோ தெரிவித்துள்ளார்.
இன்றைய திறப்பு விழா, இந்த திட்டத்திற்கான ஒரு முன்னோடித் திட்டமாகவும் செயல்படுகிறது". சுகாதார பரிசோதனைகளுக்கு கூடுதலாக, வயதான பங்கேற்பாளர்கள் உடற்பயிற்சி நடவடிக்கைகளில் பங்கேற்பார்கள் மற்றும் உடற்பயிற்சி வழிகாட்டிகள் மற்றும் ஆரோக்கியமான வாழ்வுக்கான உணவு வழிகாட்டி புத்தகங்கள் வழங்கப்படும்.
“சிலாங்கூரில் உள்ள முதியவர்களின் ஆரோக் கியத்தை பராமரிப்பதற்கான சிறந்த பராமரிப்பு நடைமுறைகள் மூலம் இது ஓர் அரசு தலையீட்டு நடவடிக்கையாகும் என்று ஜமாலியா ஜமாலுதீன் இங்குள்ள டேவான் பெரிங்கினில் நிகழ்ச்சியை நடத்திய பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.மேலும், மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியும் திரையிடல் நடவடிக்கைகளை வெண்ணித்து மலர்க முதியவர்களுடன் கலந்துரையாடினார்.
இந்த ஆண்டு பொது சுகாதாரத்திற்கு மாநில நிர்வாகம் வழங்கிய வெ 40 மில்லியன் ஒதுக்கீட்டின் ஒரு பகுதியாக இந்த திட்டத்தை செயல் படுத்துவதாகவும் ஜமாலியா கூறினார். “இந்தத் திட்டம் திருப்திகரமான நிலைகளையும் அதிக செலவுகளையும் ஏற்படுத்தாத பராமரிப்பாளர்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான ஒரு முயற்சியாகும்"
"பராமரிப்புக்கான அதிக செலவு சமூகத்தில் அல்லது தங்கள் பெற்றோரை கவனித்துக்
கொள்ள வேண்டிய இளம் தம்பதிகளிடையே தாக்கத்தை ஏற்படுத்துகிறது, பிள்ளைகள்
விடுப்பு எடுக்க வேண்டி இருந்தால், நன்றாக வேலை செய்ய முடியாவிட்டால் பொருளாதார விளைவுகள் உட்பட,பல இடர்கள் ஏற்படுவதாக அவர் கூறினார்.
Kerajaan Selangor melancarkan skim kesihatan warga emas bagi mencegah risiko kesihatan. Seramai 3,000 warga emas disasar menerima pemeriksaan kesihatan percuma. Program ini juga merangkumi senaman dan panduan pemakanan sihat sebagai usaha menjaga kesejahteraan warga emas.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *