1,200 கிலோ சமையல் சிலிண்டர்களைக் கடத்திய நால்வர் கைது!

top-news

ஜூன் 3,

அரசு மானிய விலையிலான LPG சமையல் எரிவாயுவைக் கடத்திய வெளிநாட்டு ஆடவர் உட்பட 3 உள்ளூர் ஆடவர்கள் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் சம்மந்தப்பட்ட நால்வரும் தங்கள் மீதானக் குற்றத்தை ஒப்புக் கொண்டனர். கடத்ந கடந்த மே 30, மாலை 6.45 மணிக்கு நெகிரி செம்பிலான் KPDN அதிகாரிகள் SR Valley, Jalan Mantin பகுதியில் உள்ள பொருள் கிடங்கில் சோதனையிட்ட போது 1,200 கிலோ எடையிலான LPG சமையல் எரிவாயு சிலிண்டர்கள் மீட்கப்பட்டது.

சம்மந்தப்பட்ட பொருள்கிடங்கில் மறைந்திருந்த 57 வயது Lee Kin Choong, 38 வயது Lim Chun Wee, 28 வயது Tan Kai Lun 31 வயது Mar Thang எனும் நால்வரும் கைது செய்யப்பட்டனர். 31 வயது Mar Thang எனும் ஆடவர் UNHCR அடையாள அட்டை கொண்டிருக்கும் வெளிநாட்டு அகதி என தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்மந்தப்பட நால்வரில் உள்ளூர் ஆடவர்கள் மூவருக்குத் தலா RM6,000 ஜாமினும், UNHCR அடையாள அட்டை கொண்டிருக்கும் வெளிநாட்டு அகதிக்கு RM8,000 ஜாமின் வழங்கியதுடன் ஜூன் 5 ஆம் நாள் வழக்கு மீண்டும் விசாரிக்கபடவிருப்பதாகவும் Sesyen நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Empat individu termasuk seorang memiliki kad UNHCR ditahan kerana menyeludup 1,200 kilogram LPG bersubsidi di Seremban. Ketika serbuan pada 30 Mei, kesemua suspek mengaku bersalah. Mahkamah Sesyen menetapkan jaminan RM6,000 hingga RM8,000 dan perbicaraan semula 5 Jun.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *