திரங்கானுவில் GISBH நிறுவனங்களை முடக்க அவசியம் இல்லை! - Terengganu Menteri Besar

top-news
FREE WEBSITE AD

GISB Holdings நிறுவனம் திரங்கானுவில் தொடர்ந்து செயல்படும் என Terengganu Menteri Besar, Datuk Seri Dr Ahmad Samsuri Mokhtar உறுதிப்படுத்தினார். 402 சிறார்கள் மீது வன்கொடுமைகளை நிகழ்த்தியதாக GISB Holdings நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட 230 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் Terengganu Menteri Besar, Datuk Seri Dr Ahmad Samsuri Mokhtar இவ்வாறு தெரிவித்துள்ளார். GISB Holdings’க்குச் சொந்தமான நிறுவனங்களை மூடும்படி திரங்கானு அரசாங்கம் எந்தவோர் அரசாணையும் வெளியிடவில்லை என அவர் தெரிவித்தார்.

GISB Holdings’இன் தலைமை நிர்வாகத்தினர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் நடக்கிறது. GISB Holdings’க்கு எதிராக நீதிமன்றம் எந்தவொரு தீர்ப்பையும் வழங்கவில்லை என்பதால் அதை முடக்குவதற்கான அவசியம் ஏதுமில்லை என அவர் விளக்கமளித்தார்.

GISB Holdings’க்குச் சொந்தமான வணிகத் தளங்களை மூடும்படியான நடவடிக்கைகள் மேற்கொள்ளும் முன்னர் தீவிரமாகச் சிந்திக்க பல்வேறு காரணங்கள் இருப்பதாகவும் நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பின்னர் மாநில அரசு இது குறித்து முடிவுகள் எடுக்கும் என Terengganu Menteri Besar, Datuk Seri Dr Ahmad Samsuri Mokhtar தெரிவித்தார்

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *