பேனாவால் சிறுமியைக் காயப்படுத்திய ஆசிரியைக் கைது!

- Sangeetha K Loganathan
- 31 May, 2025
மே 31,
செலாயாங்கில் உள்ள மழலையர் பள்ளியில் 6 வயது சிறுமியைப் பேனாவால் தாக்கி காயப்படுத்தியதாக நம்பப்படும் 30 வயது மழலையர் பள்ளி ஆசிரியைக் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கோம்பாக் மாவட்டக் காவல் ஆணையர் Noor Ariffin Mohamad Nasir தெரிவித்தார். 6 வயது சிறுமியின் தலை பகுதியில் காயம் ஏற்பட்ட நிலையில் சிறுமியின் தந்தை கடந்த வியாழன் இரவு 11.13 மணிக்குக் கோம்பாக் காவல் நிலையத்தில் புகார் அளித்ததும் சம்மந்தப்பட்ட மழலையர் பள்ளியைச் சோதனையிட்டதாக Noor Ariffin Mohamad Nasir தெரிவித்தார்.
சம்மந்தப்பட்ட மழலையர் பள்ளியின் CCTV காணொலிகளின் ஆதாரங்களின்படி சம்மந்தப்பட்ட 30 வயது மழலையர் பெண் ஆசிரியைக் கைது செய்துள்ளதாகவும் மழலையர் ஆசிரியர் என்றாலும் அவர் அப்பள்ளியின் பணிப்பெண்னாக மட்டுமே வேலை செய்து வந்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ள நிலையில் மேலதிக விசாரணைக்காக அவர் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் கோம்பாக் மாவட்டக் காவல் ஆணையர் Noor Ariffin Mohamad Nasir தெரிவித்தார்.
Seorang wanita berusia 30 tahun ditahan kerana disyaki mencederakan murid perempuan berusia 6 tahun menggunakan pen di sebuah tadika di Selayang. CCTV sekolah menjadi bukti, dan siasatan mendapati suspek hanya pekerja pembantu, bukan guru bertauliah.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *