எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒதுக்கீடுகள் வழங்க அரசு தயாராகவே இருக்கிறது! - அன்வார்
- Shan Siva
- 09 Jul, 2024
கோலாலம்பூர், ஜூலை 9: எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான
ஒதுக்கீடுகள் ஒவ்வொரு எதிர்க்கட்சி எம்.பி.யும் தனித்தனியாக இல்லாமல்
தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பிரதமர்
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித்
தலைவர், கட்சிப் பிரதிநிதிகள் தொடங்கி, நாங்கள் நியமித்துள்ள துணைப் பிரதமர் 2 (டத்தோஸ்ரீ ஃபதில்லா யூசோப்) உடன்
விவாதிக்க ஒரு பிரதிநிதியை நியமிக்க வேண்டும் என்று அவர் நாடாளுமன்ற கேள்வி நேரத்தின்
போது இதனைத் தெரிவித்தார்.
எதிர்க்கட்சி
எம்.பி.க்களுக்கான ஒதுக்கீட்டைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்பிய சையத் சாதிக்
சையத் அப்துல் ரஹ்மானின் (முடா-முவார்) துணைக் கேள்விக்கு அவர் இவ்வாறு
பதிலளித்தார்.
முன்பு பெரா
நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் பிரதமராக இருந்தபோதும், அதே செயல்முறைதான் என்று அன்வார் கூறினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *