சிங்கப்பூரிலிருந்து ஆங்கில ஆசிரியர்களைத் தருவிக்கும் விவகாரம்... ஆய்வில் இருப்பதாக கல்வி அமைச்சு அறிவிப்பு!
- Shan Siva
- 16 Jul, 2024
கோலாலம்பூர், ஜூலை 16: மலேசியாவில் ஆங்கிலம் கற்பிக்க சிங்கப்பூர்
ஆசிரியர்களை தன்னார்வ அடிப்படையில் கொண்டு வருவதற்கான முன்மொழிவை எவ்வாறு
செயல்படுத்துவது என்று கல்வி அமைச்சு ஆய்வு செய்து வருவதாக கல்வி அமைச்சர்
ஃபத்லினா சிடெக் நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்தார்.
அமைச்சு இந்த முன்மொழிவை
வரவேற்பதோடு, அதனைஆய்வு செய்து வருவதாகக்
குறிப்பிட்ட அவர், குறிப்பாக கல்வி
நிறுவனங்களில் நடைமுறைப்படுத்துவது தற்போதுள்ள கொள்கைகள் மற்றும் விதிகளுக்கு
இணங்குவதை உறுதிசெய்கிறது என்று அமைச்சர்களின் கேள்வி நேரத்தின் போது தெரிவித்தார்.
கற்பித்தல்
மற்றும் கற்றலின் செயல்முறை தரத்தை உறுதிப்படுத்த தேவையான தகுதிகளைக் கொண்ட
தன்னார்வலர்களையும் அமைச்சு அடையாளம் காணும் என்று அவர் மேலும் கூறினார்.
ஆஸ்திரேலியா,
அமெரிக்கா மற்றும் தென் கொரியாவைச் சேர்ந்த
ஆசிரியர்களுடன் அமைச்சு இதேபோன்ற முயற்சிகளை செயல்படுத்தியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
சிங்கப்பூரில்
இருந்து ஆங்கில ஆசிரியர்களை வரவழைக்க சிறப்புத் திட்டங்கள் உள்ளதா? மேலும், உள்ளூர்
ஆசிரியர்களிடையே ஆங்கில மொழித் திறனை வலுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்
குறித்து பெரிக்காத்தான் சபா பெர்ணாம் நாடாளுமன்ற உறுப்பினர் கலாம் சலனின் கேள்விக்கு
அவர் இவ்வாறு பதிலளித்தார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *