குயில் ஜெயபக்தி புத்தகக் கண்காட்சிக்கு வரும் மக்கள் எண்ணிக்கையில் குறையவில்லை!

- Muthu Kumar
- 01 Jun, 2025
கோலாலம்பூர், ஜூன் 1-
வாசிப்பிற்கு இணையத்தை அதிகம் நாடும் இந்தக் காலக்கட்டத்தில், புத்தகக் கண்காட்சிக்கு வரும் மக்களின் எண்ணிக்கையிலும் குறைவில்லை.இம்மாதம் மே 23ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் முதலாம் தேதி வரை நடைபெறும் 2025ஆம் ஆண்டுக்கான கோலாலம்பூர் அனைத்துலக புத்தகக் கண்காட்சியில், பெருமளவில் மக்கள் வருகை தருவது புத்தகத்தை வாசிக்கும் பழக்கம் இன்னும் மக்களிடையே நிலைத்து இருப்பதைக் காட்டுகிறது.
42ஆவது முறையாக நடத்தப்படும் புத்தகக்கண்காட்சியில் கல்வி, இலக்கியம், அறிவியல் கதைகள், நாவல், வாழ்வியல் உட்பட பள்ளி மாணவர்களுக்கான புத்தகங்களும் விற்கப்பட்டன. இந்தக் கண்காட்சியில் பல்வேறு நிறுவனங்களின் ஆயிரத்து 172 முகப்புகள் திறக்கப்பட்டிருந்த நிலையில், மக்கள் தங்களுக்கு விருப்பமான புத்தகங்களை வாங்கிச் செல்வதை காண முடிந்தது.
அனைத்து இனத்தவர்களும் கலந்து கொள்ளும் இந்தக் கண்காட்சியில் இந்திய சமுதாயத்தில் புகழ்பெற்ற பதிப்பகமான ஜெயபக்தியின் முகப்பும் இடம் பெற்றிருந்தது. புத்தகக் கண்காட்சி தொடங்கிய காலத்தில் இருந்து, ஒவ்வோர் ஆண்டும் முகப்பை திறக்கும் ஒரே தமிழ் பதிப்பகம் என்ற பெருமையைக் கொண்டிருக்கும் ஜெயபக்தி, மக்களுக்காக குறிப்பாக மாணவர்களுக்கான புத்தகங்களை விற்பனை செய்வதாக அதன் முகப்பின் நிர்வகிப்பாளர் பார்கவி செல்வராஜூ தெரிவித்துள்ளார்.
"இது பொதுவாக நடக்கும் கண்காட்சி என்பதால், தமிழ் புத்தகங்கள் மட்டுமல்லாது ஆரம்பப்பள்ளி, இடைநிலைப்பள்ளி மற்றும் தேசியப் பள்ளி மாணவர்களுக்கான புத்தகங்களையும் விற்பனை செய்கிறோம்.
மலாய், ஆங்கிலம் கதைப் புத்தகங்கள், நாவல்கள் என்று பல புத்தகங்கள் உள்ளன. நிறைய பேர் பயிற்சிப் புத்தகங்களை வாங்குகின்றனர். தன்முனைப்பு புத்தகங்களை மூன்று மொழிகளிலும் விற்பனை செய்கிறோம்," என்றார் அவர்.
Pameran Buku Antarabangsa Kuala Lumpur 2025 membuktikan minat membaca masih kukuh walaupun era digital. Pelbagai buku pelajar dan dewasa dijual. Penerbit Tamil Jayabakti turut serta, menawarkan buku dalam tiga bahasa termasuk Melayu dan Inggeris untuk semua peringkat usia.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *