ஓமன் நாட்டில் மசூதிக்கு அருகே துப்பாக்கிச் சூடு - மலேசியா கண்டனம்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர்: கடந்த செவ்வாய்க்கிழமை ஓமனின் மஸ்கட்டில் உள்ள மசூதிக்கு அருகில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தை மலேசியா கண்டித்துள்ளது

 

இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கும், ஓமன் சுல்தானகத்தின் மக்களுக்கும், அரசாங்கத்துக்கும் மலேசியா தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்வதாக விஸ்மா புத்ரா ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 

அனைத்து வகையான குற்றங்கள் மற்றும் வன்முறை தீவிரவாதத்தையும் நிராகரிப்பதில் மலேசியா தனது நிலைப்பாட்டை கடைபிடிக்கிறது மற்றும் குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

 

மஸ்கட்டில் உள்ள மலேசியத் தூதரகம் தொடர்ந்து நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது.

 

தூதரக உதவி தேவைப்படும் மலேசியர்கள் பின்வரும் முகவரியில் தூதரகத்தை தொடர்பு கொள்ளலாம்:

 

Embassy of Malaysia in Muscat, Sultanate of Oman

 

Villa No. 2443, Way 3030

 

Shatti Al Qurum

 

P.O. Box 51, Bareeq Alshati

 

Muscat.

தொலைபேசி எண்கள்: +(968) 2469 8329 or +(968) 7159 2388, or by email at [email protected].தூதரகத்தை +(968) 2469 8329 அல்லது +(968) 7159 2388 என்ற எண்ணில் தொலைபேசி மூலமாகவும் அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *