சுங்கத்துறையின் வருமானம் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு உயரும் என நம்பிக்கை! டத்தோ அனிஸ் ரிஸானா!
- Muthu Kumar
- 28 Sep, 2024
கோலாலம்பூர், செப். 28-
அரச மலேசிய சுங்கத்துறையின் வருமானம் இவ்வாண்டு ஆகஸ்டு மாத நிலவரப்படி
4,168 கோடி வெள்ளியாக அதிகரித்துள்ளது.கடந்தாண்டின் இதே காலகட்டத்தில் அதற்கு கிடைக்கப்பெற்ற வருமானம் 3,613 கோடி வெள்ளியாகும் என்று சுங்கத்துறையின் தலைமை இயக்குநர் டத்தோ அனிஸ் ரிஸானா முகமது ஸைனுடின் தெரிவித்தார்.
இவ்வாண்டின் இறுதிக்குள் சுங்கத்துறையின் வருமானம் 5,600 கோடி வெள்ளியை எட்ட வேண்டும் என்று நிதியமைச்சு இலக்கு நிர்ணயித்துள்ளது. கடந்தாண்டு முழுவதும் சுங்கத்துறை வசூலித்த வருமானம் 5,510 கோடி வெள்ளியாகும் என்று ரிஸானா தெரிவித்தார். இவ்வாண்டின் முதல் எட்டு மாதங்களில் 125 கோடி வெள்ளி மதிப்புள்ள கள்ளக் கடத்தல் பொருட்களும் கைப்பற்றப்பட்டன என்றும் அவர் கூறினார். அவற்றில் சிகரெட்டுகள், புகையிலைப் பொருட்கள், பிளாஸ்டிக் கழிவுப்பொருட்கள் போன்றவையும் அவற்றில் அடங்கும்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *