ஜொகூரில் 114 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது!

- Sangeetha K Loganathan
- 30 May, 2025
மே 30,
ஜொகூரின் 5 மாவட்டங்களில் இயங்கி வந்த 9 பிரபலத் தொழில்சாலைகளில் ஜொகூர் மாநிலக் குடிநுழைவுத் துறையிநர் மேற்கொண்ட சோதனையில் சட்டவிரோதமாகப் பணிக்கு அமர்த்தப்பட்ட 114 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜொகூர் மாநிலக் குடிநுழைவுத் துறையின் இயக்குநர் Datuk Mohd Rusdi Mohd Darus தெரிவித்தார். வெளிநாட்டினர்களைக் கண்காணித்து வந்த 50 முதல் 60 வயதுக்குற்பட்ட 4 உள்ளூர் ஆடவர்களையும் கைது செய்துள்ளதாக Datuk Mohd Rusdi Mohd Darus தெரிவித்தார்.
ஜொகூரின் Muar, Segamat, Mersing, Batu Pahat, Johor Bahru ஆகிய மாவட்டங்களில் இயங்கி வந்த தொழில்சாலைகளில் வேலை செய்து வந்த 511 வெளிநாட்டினர்களிடம் சோதனை மேற்கொண்டதாகவும் 44 வங்காளதேசிகள், நேப்பாளத்தைச் சேர்ந்த 28 பேர், பாக்கிஸ்தானைச் சேர்ந்த 9 பேர், இந்தியாவைச் சேர்ந்த 8 பேர், மியன்மாரைச் சேர்ந்த 14 பேர், இந்தோனேசியாவைச் சேர்ந்த 8 பேர், வியட்நாமைச் சேர்ந்த 4 பேர், கம்போடியாவைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் 114 பேர் சட்டவிரோதமாக மலேசியாவில் தங்கியிருந்ததால் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக ஜொகூர் மாநிலக் குடிநுழைவுத் துறையின் இயக்குநர் Datuk Mohd Rusdi Mohd Darus விளக்கமளித்தார்.
Seramai 114 pekerja asing ditahan dalam operasi penguatkuasaan Imigresen di sembilan kilang di lima daerah Johor. Mereka dipercayai bekerja secara tidak sah, manakala empat warga tempatan turut ditahan kerana disyaki menggaji pekerja asing tanpa dokumen sah.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *