மலேசியாவிற்குள் நுழைய முயன்ற 279 பேரைத் தடுத்து நிறுத்தியது AKPS

- Muthu Kumar
- 03 Jun, 2025
புத்ராஜெயா, ஜூன் 3:
மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நிறுவனம் (AKPS), நேற்று கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் (KLIA) வழியாக மலேசியாவிற்குள் நுழைய முயன்ற முறையான நுழைவுத் தேவைகள் இல்லாமல் வந்த வங்கதேசம், பாகிஸ்தான் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த 279 பேரைத் தடுத்து நிறுத்தியது.மேலும் அவர்கள் அனைவரையும் உடனடியாக நாடு கடத்த உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
குறிப்பாக மலேசியாவில் உச்ச வருகை நேரங்கள் மற்றும் விடுமுறை காலங்களில் சட்டவிரோதமாக நுழையும் வெளிநாட்டினரின் போக்கு அதிகரித்து வருகிறது என்று இன்று ஓர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட அனைத்து நபர்களும் ஆவணப்படுத்தல் செயல்முறைகள் மற்றும் AKPS அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட கூடுதல் ஆய்வுகளுக்குப் பிறகு உடனடியாக தங்கள் சொந்த நாடுகளுக்குத் திரும்ப உத்தரவிடப்பட்டனர்.
Agensi Kawalan dan Keselamatan Sempadan Malaysia (AKPS) menahan 279 warga Bangladesh, Pakistan dan India yang cuba memasuki Malaysia melalui KLIA tanpa dokumen masuk yang sah. Semua mereka diarahkan diusir segera selepas proses dokumentasi dan siasatan lanjut oleh AKPS. Peningkatan kemasukan haram dilaporkan terutama pada musim puncak dan cuti.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *