ஸ்கூடாய் ஆற்றில் மிதந்து கொண்டிருந்த சிறுமியின் சடலம்: போலீசார் விசாரணை!

- Muthu Kumar
- 31 May, 2025
(கோகி கருணாநிதி)
ஜொகூர் பாரு, மே 31-
ஸ்கூடாய் ஆற்றில் நேற்று முன்தினம் காலை சுமார் 9.41 மணியளவில் ஒரு குழந்தையின் சடலம் மிதந்து கொண்டிருப்பதைப் பார்த்த 70 வயது மதிக்கத்தக்க அங்கு வசிக்கும் ஒருவர் போலீசாருக்கு தகவல் வழங்கினார். இது தொடர்பான புகாரினை பெற்ற ஜொகூர் பாரு உத்தாரா மாவட்ட போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
விசாரணையில், அந்த சடலம் ஒரு சிறுமியின்
உடலாக இருக்கலாம் எனவும், அவளது வயது
5 முதல் 7 வரை இருக்கக்கூடும் எனவும் சந்தேகிக்கப்படுகிறது. இந்த சடலத்தின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை. சிறுமி இடது
காலை ஒரு கைலாட்டில் LOVE எனும் சின்னத்துடன் எழுத்துக்கள் காணப்பட்டுள்ளன.
' இந்தச் சிறுமியின் மரணத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை என்பதால், போலீசார் தொடர்ந்து விரிவான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என ஜொகூர் பாரு உத்தாரா மாவட்ட காவல் தலைவர் ஏ.சி.பி. பல்வீர் சிங் மகிந்தர் சிங் தெரிவித்தார்.
தங்களது குழந்தை அல்லது இதே வயதுடைய
உறவினர்கள் காணவில்லை என தேடும் எவரும் அருகிலுள்ள போலீஸ் நிலையத்தில் உடனடியாக புகார் அளிக்குமாறு பொதுமக்களிடம் போலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், இந்தச் சம்பவம் தொடர்பான தகவல்கள் உள்ளவர்கள் ஜொகூர் பாரு உத்தாரா மாவட்ட போலீஸ் தலைமையகத்தை 07-5563122 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
Seorang lelaki warga emas menjumpai mayat seorang kanak-kanak perempuan berusia sekitar 5 hingga 7 tahun terapung di Sungai Skudai, Johor Bahru. Identiti belum dikenal pasti dan polis sedang menjalankan siasatan lanjut.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *