போலி முதலீட்டில் RM107,810 இழந்த செவிலியர்!

- Sangeetha K Loganathan
- 03 Jun, 2025
ஜூன் 3,
இல்லாத நிறுவனத்தின் போலி முதலீட்டில் தனது சேமிப்புப் பணத்தை முதலீடு செய்த 52 வயது பெண் செவிலியர் ஒருவர் RM107,810 இழந்துள்ளதாகப் பகாங் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Seri Yahaya Othman தெரிவித்தார். பாதிக்கப்பட்ட 52 வயது பெண் தெமர்லோவில் உள்ள மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றும் போது முகநூலில் கண்ட முதலீட்டு நிறுவனத்தில் RM350 முதலீடு செய்தால் RM12,000 வரையில் லாபம் பெறலாம் எனும்படியான விளம்பரத்தைக் கண்டதும் முதலீடு செய்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
பாதிக்கப்பட்ட 52 வயது செவிலியர் RM350 முதலீடு செய்து லாபப் பணத்திற்காகக் காத்திருந்ததாகவும் அதனை அடுத்து தாமாக முன் வந்து மே 23 முதல் 28 வரையில் 8 வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு 16 பணப்பரிவர்த்தனைகள் மூலமாக மொத்தம் RM107,810 பணத்தை இழந்துள்ளதாக Pahang, மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Seri Yahaya Othman தெரிவித்தார். இதுமாதிரி அங்கீகரிக்கப்படாத முதலீட்டு நிறுவனங்களை நம்பி ஏமாற பேண்டாம் என Pahang, மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Seri Yahaya Othman நினைவூட்டினார்.
Seorang jururawat berusia 52 tahun kerugian RM107,810 selepas terpedaya dengan pelaburan palsu di Facebook yang menjanjikan pulangan tinggi. Mangsa membuat 16 transaksi ke lapan akaun bank berbeza antara 23 hingga 28 Mei lalu.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *