தற்கொலை எதற்கும் தீர்வல்ல! மீண்டு வர பல வாய்ப்புகள் உள்ளது - KEADILAN SANGETHA அறிவுறுத்து!

top-news
FREE WEBSITE AD

இணையப் பகடிவதைக்குள்ளாகித் தற்கொலை செய்துக்கொண்ட ESHA@ Rajeswary-யின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர் KEADILAN மகளிர் அணியினர். தேசிய KEADILAN மகளிர் உதவித் தலைவர் SANGETHA JAYAKUMAR உடன் Bandar Tun Razak நாடாளுமன்றச் சிறப்பு அதிகாரிகளான Yogeswary S Veloo, Vani Veeran, Wangsa Maju நாடாளுமன்றத்தின் சிறப்பு அதிகாரியான Adlina Ahmad, Wangsa Maju மகளிர் தலைவி Haslinda Md Kasbullah, Hulu Selangor KEADILAN Srikanth Santhrakandm, Satthiya Seelan SP Sarawanan ஆகியோர் அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். 

ESHA@ Rajeswary-யின் இறப்பிற்குக் காரணமான நபர்கள் மீது காவல்துறையினர் விரைந்து நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் இது போன்ற இணையப் பகடிவதைகளைத் தடுக்கவும் அசம்பாவிதங்கள் நடப்பதற்கு முன்னமே சம்மந்தப்பட்டவர்களுக்கு ஆதரவாகச் செயல்பட நாம் அனைவரும் துணை நிற்க வேண்டும் என தேசிய KEADILAN மகளிர் உதவித் தலைவர் SANGETHA JAYAKUMAR கேட்டுக்கொண்டார்.

SayangiDiri எனும் பட்டறையின் மூலமாக மனச்சோர்வடைந்தவர்களுக்கு ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் கூறி நல்வழிப்படுத்தும் திட்டங்களையும் Befrienders KL என 03-76272929 அல்லது அவசர அழைப்பான 15999 என பல்வேறு வழிமுறைகள் இருந்தாலும் இம்மாதிரியானச் சம்பவங்கள் நிகழ்வது மிகுந்த வருத்தத்தை வரவழைப்பதாக அவர் தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *