கால்நடை கொட்டகையில் தீ! 16 ஆடுகள் பலி! 4 வாகனங்கள் கருகின!

- Sangeetha K Loganathan
- 03 Jun, 2025
ஜூன் 3,
கால்நடைகள் வளர்க்கப்பட்டு வந்த கொட்டகையில் ஏற்பட்ட தீ விபத்தில் 19 ஆடுகள் தீயில் கருகி உயிரிழந்ததுடன் கொட்டகையின் வெளியில் வைக்கப்பட்டிருந்த 4 வாகனங்களும் தீயில் முற்றிலும் கருகியது. நண்பகல் 12.58 மணியளவில் தீ விபத்துக் குறித்து பொதுமக்களிடமிருந்து அவசர அழைப்பைப் பெற்றதும் 9 தீயணைப்பு அதிகாரிகளுடன் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகப் பினாங்கு மாநிலத் தீயணைப்பு மீட்பு ஆணைய உதவி இயக்குநர் John Sagun Francis தெரிவித்தார்.
பாயான் லெப்பாசில் உள்ள கொட்டகையிலிருந்து தீ குடியிருப்புப் பகுதிக்குப் பரவாமல் 10 நிமிடங்களில் கட்டுப்படுத்தப்பட்டதாகவும் கொட்டகையிலிருந்து ஒற்றை ஆட்டுக் குட்டியை மட்டுமே மீட்க முடிந்ததாகவும் John Sagun Francis தெரிவத்தார். கொட்டகைக்கு வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 வாகனங்கள் முழுமையாகத் தீயில் கருகியதாகவும் 1 டன் லாரி 30% தீயில் கருகியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நண்பகல் 2 மணிக்குத் தீ முழுமையாக அணைக்கப்பட்டதாகப் பினாங்கு மாநிலத் தீயணைப்பு மீட்பு ஆணைய உதவி இயக்குநர் John Sagun Francis தெரிவித்தார்.
Sebuah kandang ternakan di Bayan Lepas musnah dalam kebakaran, menyebabkan 16 kambing mati dan empat kenderaan rosak teruk. Pasukan bomba berjaya mengawal kebakaran dalam masa 10 minit tanpa merebak ke kawasan perumahan berhampiran.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *