முதியவரை மோதிய வாகனம்! பெண் ஓட்டுநர் காயம்! முதியவர் படுகாயம்!

- Sangeetha K Loganathan
- 08 May, 2025
மே 8,
தனது வீட்டின் முன் குப்பைகளைச் சுத்தம் செய்துக் கொண்டிருந்த முதியவரின் மீது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் மோதி விபத்தை ஏற்படுத்தியதில் 61 வயது முதியவர் படுகாயம் அடைந்ததுடன் 37 வய்து பெண் ஓட்டுநரும் காயமடைந்ததாக குளுவாங் மாவட்டக் காவல் ஆணையர் Bahrin Mohd Noh தெரிவித்தார். இச்சம்பவம் இன்று காலை 8.30 மணிக்குச் சிம்பாங் ரெங்காமில் உள்ள Taman Tiara Perdana குடியிருப்புப் பகுதியில் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் பாதிக்கப்பட்ட முதியவர் 61 வயதான Muhamad Mustaffa Mustain என்றும் விபத்தை ஏற்படுத்திய பெண் 37 வயதான மருத்துவத் தாதியரான Izadatul Afifah என்றும் அடையாளம் காணப்பட்டுள்ளது, பணி முடிந்து வீட்டுக்குச் சென்றுக் கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்ததாக விபத்தை ஏற்படுத்திய தாதியர் வாக்குமூலம் அளித்த நிலையில் இருவரையும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகக் குளுவாங் மாவட்டக் காவல் ஆணையர் Bahrin Mohd Noh தெரிவித்தார். இந்த விபத்தில் எந்தவோர் உயிரிழப்பும் ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Kejadian kemalangan di Kluang melibatkan seorang warga emas berusia 61 tahun yang dilanggar ketika membersih kawasan rumahnya, manakala pemandu wanita berusia 37 tahun turut cedera. Kedua-duanya dirawat di hospital dan tiada kematian dilaporkan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *