லாரிகள் விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் பலி! இருவர் படுகாயம்!

- Sangeetha K Loganathan
- 07 May, 2025
மே 7,
கட்டுப்பாட்டை இழந்த 2 லாரிகள் விபத்துக்குள்ளானதில் 40 வயதுடைய லாரி ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் மற்றொரு லாரியில் இருந்த இருவர் படுகாயம் அடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை 5.48 மணிக்கு வடக்கு தெற்கு நெடுஞ்சாலையிந் SUBANG Elite அருகில் இந்த விபத்து ஏற்பட்டதாகச் சிலங்கூர் மாநில மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Ahmad Mukhlis Mukhtar தெரிவித்தார்.
விபத்துக்குள்ளான லாரியின் இடிபாடுகளில் சிக்கிய 40 வயது ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் அவரின் உடலைப் பிரேதப்பரிசோதனைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதாகவும் மற்றொரு லாரியில் இருந்த 30 வயது ஓட்டுநரும் அவரி உதவியாளரும் படுகாயத்துடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சிலங்கூர் மாநில மீட்பு ஆணைய உதவி இயக்குநர் Ahmad Mukhlis Mukhtar தெரிவித்தார். விபத்து ஏற்பட்டதற்கானக் காரணத்தைக் காவல்துறை விசாரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Dua lori terbabit dalam kemalangan di Lebuhraya Elite berhampiran Subang, mengorbankan seorang pemandu lori berusia 40 tahun di tempat kejadian, manakala dua lagi individu mengalami kecederaan parah dan sedang menerima rawatan di hospital.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *