அக்மல் சலே - திரேசா கோக் மோதல் மக்கோத்தா தேர்தலைப் பாதிக்காது!
- Shan Siva
- 23 Sep, 2024
குளுவாங், செப் 23: அம்னோ இளைஞரணித் தலைவர் டாக்டர் அக்மல் சலே மற்றும்
டிஏபியின் தெரசா கோக் இடையேயான மோதல், மக்கோத்தா இடைத்தேர்தலில் அங்குள்ள மக்கள் பாரிசான் நேசனலுக்கு
ஆதரவளிப்பதை தடுக்க முடியாது என்று ஜோகூர் டிஏபி துணைத் தலைவர் தியோ நீ சிங் தெரிவித்தார்.
கட்டாய ஹலால் சான்றிதழ்
முன்மொழிவு தொடர்பாக ஒற்றுமை அரசாங்கத்தின் இரு தலைவர்களுக்கிடையில் ஏற்பட்ட
மோதலால் மக்கோத்தா தொகுதியின் சீன வாக்காளர்கள் கவலைப்படவில்லை என்று தியோ
கூறினார்.
அதற்கு பதிலாக, செப்டம்பர் 28 அன்று போட்டியிடும் இரண்டு வேட்பாளர்களின் திறன் குறித்து அவர்கள் அதிக கவனம்
செலுத்துவதாக அவர் குறிப்பிட்டார்.
ஒரு தலைவர் வெளியிட்ட
அறிக்கையால் மகிழ்ச்சியடையாத சிலர் சீன சமூகத்தில் இருப்பதை தாம் புரிந்துகொள்வதாகவும், ஆனால் அவர் ஒரு தலைவர் மட்டுமே என்றும் அவர் கூறினார்.
ஆனால், எங்கள் வேட்பாளர் சையது ஹுசைன் சையத் அப்துல்லா உட்பட, ஜொகூரை கூட்டாக வளர்க்க விரும்பும் பல தலைவர்கள் தங்களிடம்
உள்ளதாக என்று அவர் இன்று செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
நேற்று, ஜொகூர் அம்னோ தலைவரும் மந்திரி பெசாருமான ஒன் ஹபீஸ் காசி, மக்கோத்தாவில் உள்ள சீன வாக்காளர்கள் இடைத்தேர்தலில்
வாக்களிக்க உண்மையில் ஆர்வம் காட்டவில்லை என்று வணிக சமூகத்திடம் இருந்து தனக்கு
அறிக்கைகள் கிடைத்ததாகக் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *