RM1.23 மில்லியன் மதிப்புள்ள போதைப்பொருட்களுடன் கும்பல் கைது!

top-news

மே 30,

ஜொகூர் காவல்துறையினர் மேற்கொண்ட அதிரடி சோதனையில் போதைப்பொருள் தயாரித்தல், கடத்தல் கும்பலைச் சேர்ந்த 5 ஆண்களையும் 2 வெளிநாட்டுப் பெண்களையும் கைது செய்துள்ளதாக ஜொகூர் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk M Kumar தெரிவித்தார். ஜொகூரில் இரு வெவ்வேறு இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட பல்வேறு வகையிலானப் போதைப்பொருளின் மதிப்பு RM1.23 மில்லியன் என கணக்கிடப்பட்டிருப்பதாகவும் 6 சொகுசு வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளதாகவும் ஜொகூர் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk M Kumar தெரிவித்தார்.

ஸ்கூடாய் லாமா அடுக்குமாடிக் குடியிருப்பில் 32 வயது உள்ளூர் ஆடவரும் 29 வயது மியன்மார் பெண்ணும் ekstasi, heroin, ketamin, syabu வகையிலானப் போதைப்பொருளையும் வாகனங்களையும் பறிமுதல் செய்ததாகவும் அதே அடுக்குமாடிக் குடியிருப்பின் மேல் தளத்தில் பதுங்கியிருந்த 29 முதல் 54 வயதுடைய 4 உள்ளூர் ஆடவர்களையும் மற்றொரு மியான்மார் பெண்ணையும் கைது செய்துள்ளதாக ஜொகூர் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk M Kumar தெரிவித்தார். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் மூலமாக பொன்தியானில் உள்ள பொருள் கிடங்கில் சோதனையை மேற்கொண்டதில் 35 வயது உள்ளூர் ஆடவர் போதைப்பொருள் தயாரிப்பதற்கான உபகரணங்களுடன் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் ஜொகூர் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk M Kumar தெரிவித்தார்.

Polis Johor berjaya menumpaskan sindiket pengedaran dan pemprosesan dadah dalam dua serbuan berasingan di Johor. Tujuh individu termasuk dua wanita warga asing ditahan dengan rampasan dadah dianggarkan bernilai RM1.23 juta serta enam kenderaan mewah.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *