வழிப்பறியில் ஈடுபட்ட ஆடவர்! சரமாரியாகத் தாக்கிய பொதுமக்கள்!

top-news

மே 30,

கோம்பாக்கில் உள்ள வணிகக் கடை சாலையில் வழிப்பறியில் ஈடுபட்ட இருவரில் ஒருவரைப் பொதுமக்கள் பிடித்து சரமாரியாகத் தாக்கினர். இது தொடர்பானக் காணொலி சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து வழிப்பறியில் ஈடுபட்ட 31 வயது உள்ளுர் ஆடவரைப் பொதுமக்களிடமிருந்து மீட்டு கைது செய்திருப்பதாகக் கோம்பாக் மாவட்டக் காவல் ஆணையர் Noor Ariffin Mohamad Nasir தெரிவித்தார். வழிப்பறியில் ஈடுபட்ட மற்றோர் ஆடவர் மோட்டார் சைக்கிளில் தப்பிய நிலையில் மோட்டார் சைக்கிளின் பதிவு எண்களைக் கொண்டு மேலதிக விசாரணையை நடத்தி வருவதாக கோம்பாக் மாவட்டக் காவல் ஆணையர் Noor Ariffin Mohamad Nasir தெரிவித்தார்.

இச்சம்பவம் நேற்று மாலை 5.25 மணிக்கு ரவாங்கில் உள்ள கடை வீதியில் நிகழ்ந்ததாகவும், கடையிலிருந்து வெளியேறிய 45 வயது பெண்ணின் கழுத்திலிருந்த தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்ற போது அவரின் 55 வயது கணவர் வழிப்பறியில் ஈடுபட்டவரைத் தாக்கி பிடித்ததாகவும் கோம்பாக் மாவட்டக் காவல் ஆணையர் Noor Ariffin Mohamad Nasir தெரிவித்தார். வழிப்பறியில் ஈடுப்பட்ட 31 வயது ஆடவர் மேலதிக விசாரணைக்காக 7 நாள்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருப்பதாக கோம்பாக் மாவட்டக் காவல் ஆணையர் Noor Ariffin Mohamad Nasir தெரிவித்தார்.

Seorang lelaki ditahan selepas cuba meragut rantai emas seorang wanita di Rawang. Suspek dipukul orang awam sebelum diselamatkan dan ditahan polis. Rakannya melarikan diri menaiki motosikal dan sedang dikesan oleh pihak berkuasa.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *