கொலை வழக்கில் 5 இந்தோனேசியர்கள் கைது!

- Sangeetha K Loganathan
- 01 Jun, 2025
ஜூன் 1,
இந்தோனேசியத் தொழிலாளர் ஒருவரைக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட 5 இந்தோனேசியர்கள் தங்கள் மீதானக் குற்றத்தை மறுத்து ஜாமீன் கோரினர். இன்று வழக்கை விசாரித்த கோலாலம்பூர் MAJISTRET நீதிமன்றம் சம்மந்தப்பட்ட 5 இந்தோனேசிய ஆடவர்களின் ஜாமின் மனுவைத் தள்ளுபடி செய்ததுடன் வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 26 ஒத்திவைத்துள்ளது.
கடந்த 4 மே KAMPUNG SEGAMBUT ஆற்றங்ககரையில் இந்தோனேசிய ஆடவரின் சடலம் காயங்களுடன் மீட்கப்பட்ட நிலையில் அவர் கொலை செய்யப்பட்டிருப்பதாகவும் அவருடன் தங்கியிருந்த சக இந்தோனேசியர்கள் காணாமல் போனதை அடுத்து சம்மந்தப்பட்ட ஐவரில் நால்வரை காஜாங்கிலும் மற்றொருவரை ஜொகூரிலும் காவல்துறை கைது செய்தது. கைதள செய்யப்பட்ட ஐவரும் 21 முதல் 40 வயதுக்குற்பட்ட இந்தோனேசியர்கள் என்றும் கொலை செய்யப்பட்டவருடன் ஒன்றாக வேலை செய்து வந்தவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது.
Lima lelaki warga Indonesia ditahan atas kes pembunuhan rakan senegara di Kampung Segambut. Mereka mohon jaminan namun ditolak oleh mahkamah. Kes disambung 26 Ogos. Kesemua suspek adalah rakan sekerja mangsa yang ditemui mati 4 Mei lalu.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *