MUHYIDDIN சேர்க்கை சரியில்லை! - LIM GUAN ENG சாடல்!

top-news
FREE WEBSITE AD

முன்னாள் பிரதமர் Muhyiddin yassin க்கு எதிராக வழக்கு தொடுக்கவிருப்பதாக முன்னாள் நிதியமைச்சரும் DaP தலைவருமான lim guan eng இன்று தெரிவித்தார். முன்னதாக Lim guan eng நிதியமைச்சராக இருந்த போது, இஸ்லாமிய சமய அறவாரியமான அல்-பஹாரி (Al-Bukhary) மீது அதிக வரி வசூலிக்கப்படி உத்தரவிட்டதாகவும் இஸ்லாமியச் சமய அறவாரியங்களுக்கான வரிவிலக்குகளை அவர் ரத்து செய்ததாகவும் முகிடின் தெரிவித்த நிலையில்,  lim guan eng அதனை மறுத்தார்.

நிதி அமைச்சர் எனும் முறையில் தனியார் அறவாரியங்களுக்கான வரிவிலக்குகளை மட்டுமே தாம் ரத்து செய்ததாகவும் இஸ்லாமிய சமய அறவாரியங்களுக்கான வரி விலக்கை பிரதமரே நினைத்தாலும் ரத்து செய்ய முடியாது என lim guan eng விளக்கமளித்தார். முகிடின் பிரமராக இருந்தவர். அவருக்கும் ஓரளவிற்குச் சட்டம் தெரியும் என தாம் நம்புவதாகவும். ஆனாலும் இது போன்ற அவதூறுகளைப் பரப்புவதற்குக் காரணம் அவர் சேர்ந்த இடம் தான் என்றும், விரைவில் muhyiddin மீது சட்ட நடவடிக்கையை எடுக்கவிருப்பதாக lim guan eng தெரிவித்தார். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *