மகாதீருக்கு ஞாபக மறதி முற்றிவிட்டது! – பி.கே.ஆர் MP சாடல்!

- Sangeetha K Loganathan
- 04 Jun, 2025
ஜூன் 4,
முன்னாள் பிரதமர் Tun Dr Mahathir Mohamad முன்னுக்குப் பின் முரணாகப் பேசி வருவதைப் பி.கே.ஆரின் BATU PAHAT நாடாளுமன்ற உறுப்பினர் Onn Abu Bakar சாடியுள்ளார். மகாதீர் 100 வயதை எட்டவிருக்கும் நிலையில் அவருக்கு ஞாபக மறதி அதிகரித்துவிட்டதாகவும் Onn Abu Bakar தெரிவித்துள்ளார். வயதானாலே இப்படி தான், பலருக்கும் ஏற்படும் மறதி தான் மகாதீருக்கும் ஏற்பட்டுள்ளது. சில நேரங்களில் அறிவாற்றலுடன் நடந்து கொண்டாலும் பெரும்பாலான நேரங்களில் அவர் முன்னுக்குப் பின் முரணாகவே பேசுவதும், நடந்ததை இல்லை என மறுப்பதுமாகத் தொடர்கிறது என Onn Abu Bakar தெரிவித்தார்.
அன்வாருக்கானப் பொதுமன்னிப்புத் தொடர்பானக் கூட்டத்தில் பிரதமர் இல்லாமல் எப்படி நடத்தப்படும். மகாதீர் மன்னிப்பு வாரியத்தின் கூட்டங்களில் பங்கேற்கவில்லை என தெரிவிப்பதை எப்படி நாம் ஏற்பது. மகாதீருக்குத் தாம் முன்னாள் பிரதமர் என்பதாவது நினைவில் இருக்கிறதா எனும் கேள்வியையும் Onn Abu Bakar முன்வைத்துள்ளார். மகாதீர் மறதியில் பேசுவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்துகிறது. அன்வாருக்குப் பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட போது மகாதீர் பிரதமராக இருந்தார். பிரதமராக இருந்த போது வழங்கப்பட்ட பொதுமன்னிப்பை இல்லை என மகாதீர் மறுத்தால், அது அன்வார் இப்போது பிரதமராகப் பொறுப்பில் இருப்பது எப்படி எனும் சந்தேகத்தையும் ஏற்படுத்துகிறது. இது பெரும் சர்ச்சையாகும் முன்னரே முறையாக விளக்கபட வேண்டும் என Onn Abu Bakar கேட்டுக்கொண்டார்.
Ahli Parlimen PKR Batu Pahat, Onn Abu Bakar menyindir Tun Dr Mahathir Mohamad yang didakwa sering bercanggah dalam kenyataannya. Beliau mendakwa bekas Perdana Menteri itu mengalami masalah ingatan akibat usia lanjut, mencetuskan kontroversi.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *