பெண் தொழிலாளரைக் காயப்படுத்திய முதலாளி கைது!

top-news

மே 30,

அலுவலகத்தில் பணியாற்றும் பெண் தொழிலாளர் ஒருவரை ஆடவர் ஒருவர் தாக்கும்படியானக் காணொலி சமூக வலைத்தளங்களில் பரவியதை அடுத்து சம்மந்தப்பட்ட ஆடவரைக் காவல்துறையினர் கைது செய்திருப்பதாக Seri Alam, மாவட்டக் காவல் ஆணையர் Mohd Sohaimi Ishak தெரிவித்தார். இச்சம்பவம் கடந்த மே 15 பாசீர் கூடாங் மாசாயில் உள்ள ஒரு நிறுவனத்தில் நண்பகர் 1 மணியளவில் நிகழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக Seri Alam, மாவட்டக் காவல் ஆணையர் Mohd Sohaimi Ishak தெரிவித்தார்.

சம்பவம் நிகழ்ந்த அதே நாள் பாதிக்கப்பட்ட 34 வயது பெண் ஊழியர் மாலை 5.33 மணிக்கு Seri Alam காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் இரவில் சம்மந்தப்பட்ட முதலாளி கைது செய்யப்பட்டதாகவும் தற்போது வழக்கு நீதிமன்ற விசாரணையில் இருப்பதாகவும் Seri Alam, மாவட்டக் காவல் ஆணையர் Mohd Sohaimi Ishak விளக்கமளித்தார். கைது செய்யப்பட்ட நிறுவன முதலாளியின் மீதானக் குற்றம் நிரூபிக்கப்பட்டா குறைந்தபட்சம் ஓராண்டு சிறையும் RM 2,000 அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்றும் பாதிக்கப்பட்ட 34 வயது நிறுவன ஊழியர் எந்தவொரு காயங்களுக்கும் உள்ளாகவில்லை என்றும் Seri Alam, மாவட்டக் காவல் ஆணையர் Mohd Sohaimi Ishak விளக்கமளித்தார்.

Seorang majikan ditahan selepas menyerang pekerja wanita di sebuah syarikat di Pasir Gudang pada 15 Mei. Video kejadian tular di media sosial. Mangsa membuat laporan polis dan kes kini dalam siasatan mahkamah. Mangsa tidak cedera serius.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *