இராணுவ அதிகாரியின் வாகனத்தை மோதி மோட்டார் சைக்கிளோட்டி பலி!

- Sangeetha K Loganathan
- 02 Jun, 2025
ஜூன் 2,
கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் முன்னே சென்றுக் கொண்டிருந்த வாகனத்தை மோதி விபத்துக்குள்ளானதில் 49 வயது மோட்டார் சைக்கிளோட்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கிழக்கு கடற்கரை நெடுஞ்சாலையின் தெமர்லே அருகில் பிற்பகல் 2.40 மணிக்கு இந்த விபத்து நிகழ்ந்ததாகவும் உயிரிழந்தவர் சிலாங்கூரைச் சேர்ந்த 49 வயது Zakuan Lateh என அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் குவாந்தான் மாவட்டக் காவல் ஆணையர் WAN MOHD ZAHARI WAN BUSU தெரிவித்தார்.
HONDA CITY வாகனத்தை முந்தும் போது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்புச் சுவரையும் பெண் இராணுவ வீரர் ஓட்டி வந்த வாகனத்தையும் மோதி விபத்துக்குள்ளானதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அலுவல் பயணமாக இராணு அரசு வாகனத்தில் மெந்தகாப் நோக்கி சென்றுக் கொண்டிருந்ததாக விபத்தில் பாதிக்கப்பட்ட இராணுவ வீரர் வாக்குமூலம் அளித்துள்ளதாக குவாந்தான் மாவட்டக் காவல் ஆணையர் WAN MOHD ZAHARI WAN BUSU தெரிவித்தார்.
Seorang penunggang motosikal lelaki berusia 49 tahun maut selepas terbabas dan melanggar kenderaan pegawai tentera wanita di Temerloh. Mangsa dikenalpasti sebagai Zakuan Lateh dari Selangor. Polis masih menjalankan siasatan lanjut mengenai insiden tersebut.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *