13ஆவது மலேசியத் திட்டத் தாக்கலுக்காக பொருளாதாரத்துறை அமைச்சர் உடனடியாக நியமிக்கப்பட வேண்டும்!

top-news
FREE WEBSITE AD

பொந்தியான், மே 31-

13ஆவது மலேசியத் திட்ட நகல் வரும் ஜூலை மாதத்தில் தாக்கல் செய்யப்படத் திட்டமிடப்பட்டிருப்பதன் காரணத்தினால், புதிய பொருளாதாரத்துறை அமைச்சர் விரைந்து நியமிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மிகச் சிறந்த முறையில் நிர்வகிக்கப்பட வேண்டிய ஓர் உயர்வான தாக்கத்துடனான ஆவணமாக இத்திட்டம் இருப்பதால், அந்நியமனம் விரைந்து செய்யப்பட வேண்டும் என்று, அம்னோ உச்சமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் மஸ்லான் கேட்டுக் கொண்டுள்ளார்.அதோடு, மக்களவையில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக, அத்திட்டம் குறித்த ஆவணம் வழக்கமாக பல முறை ஆராயப்படவும் வேண்டியுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

“13ஆவது மலேசியத் திட்ட நகலை, பொருளாதாரத்துறை அமைச்சராக இருந்த டத்தோ ஸ்ரீ ரஃபிஸி ரம்லியினால் தயாரிக்கப்பட்டுவிட்டது. அதை பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மக்களவையில் தாக்கல் செய்வார்.'ஆதலால், ஜூலை மாதத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னர் இத்திட்டத்தின் நகலை பரிசோதிப்பதற்காகவும் ஆராய்வதற்காகவும் பொருளாதாரத்துரை அமைச்சர் மிக முக்கியமாகத் தேவைப்படுகிறார் என்று நான் கருதுகிறேன்.

"எனினும், புதிய பொருளாதாரத்துறை அமைச்சரை நியமிப்பது பிரதமரின் தனிப்பட்ட அதிகாரத்திற்கு உட்பட்டது" என்று ஜொகூர், பொந்தியானில் நேற்று நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, பொதுப்பணி துணை அமைச்சருமான மஸ்லான் தெரிவித்தார்.இத்திட்டத்தின் நகலை ரஃபிஸி முழுமையாகத் தயாரித்து விட்டதாக கடந்த மார்ச் மாதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

Ahmad Maslan meminta pelantikan segera Menteri Ekonomi baru sebelum Bajet Malaysia Ke-13 dibentangkan Julai ini. Bajet itu penting dan perlu dikaji dengan teliti. Pelantikan menteri adalah kuasa peribadi Perdana Menteri Anwar Ibrahim.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *