கோலாலம்பூர், ஜூலை 9: நாட்டின் மனநல நெருக்கடி ஹெல்ப்லைன் அல்லது ஹீல்
லைன் நிறுவப்பட்டதிலிருந்து 48,903
அழைப்புகளைப் பெற்றுள்ளதாக துணைப் பிரதமர்
அஹ்மத் ஜாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
இது மிக
அதிக எண்ணிக்கையாகும் என்று குறிப்பிட்ட அவர், இதை ஒரு சமூகமாக
நாம் தீவிரமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று இன்று தேசிய சமூக கவுன்சில் கூட்டத்திற்கு தலைமை
தாங்கிய பின்னர் செய்தியாளர் கூட்டத்தில் இதனைக்
கூறினார்.
புள்ளிவிவரங்களின்படி, தற்கொலை செய்பவர்களில் பெரும்பாலானவர்கள் சீனர்கள் என்றும், அதைத் தொடர்ந்து இந்தியர்கள் மற்றும் மலாய்க்காரர்கள் என்றும் ஜாஹிட்
கூறினார்.
நாட்டில் நிலவும்
தற்கொலைப் பிரச்சினையைச் சமாளிப்பதற்கான கூட்டு முயற்சிகள் குறித்தும் கூட்டத்தில்
ஒப்புக்கொள்ளப்பட்டதாக ஜாஹிட் கூறினார்.
சுகாதார அமைச்சு மற்றும்
காவல்துறையால் மட்டுமல்ல, தனிநபர்களுக்கு ஆலோசனை வழங்கக்கூடிய பிற
நிறுவனங்களாலும் செயல்திறன் மிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்," என்று அவர் கூறினார்.
டிக்டாக் பிரபலம்
ராஜேஸ்வரி தற்கொலை செய்து கொண்ட விவகாரம், வரும் வெள்ளிக்கிழமை
அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் என்று ஜாஹிட் கூறினார்!