சீனாவுக்குப் பிறகு இந்தியா! – டில்லியில் அமைச்சர் ஜொஹாரி அப்துல் கனி
- Shan Siva
- 19 Jul, 2024
புதுடில்லி, ஜூலை 19: மலேசியா அரசியல் நிலைத்தன்மையை அனுபவித்து வருவதாகவும், அடுத்த தேர்தல் 2027 க்கு முன் நடத்தப்படாது என்றும் தோட்ட மற்றும் மூலப்பொருள் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஜொஹாரி அப்துல் கானி கூறினார்.
நேற்று மாலை புது டில்லியில்
நடைபெற்ற மலேசிய சமூக நிகழ்வில் பேசும் போது அமைச்சர் இவ்வாறு கூறினார்.
மலேசியா அரசியல் ரீதியாக
நிலையானதாக இருப்பதாகக் கூறிய ஜோஹாரி, இளைஞர்களின்
ஈடுபாடு குறித்த அவசியத்தை வலியுறுத்தினார்.
ஒவ்வொர் ஆண்டும் 400,000 புதிய வாக்காளர்கள் இருப்பார்கள் என்றும், உலகில் என்ன நடக்கிறது என்பது பற்றி இளைய
தலைமுறையினர் நன்கு அறிந்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.
மலேசியா-இந்தியா பொருளாதார
உறவுகளை வளர்ப்பதற்கான சாத்தியக்கூறுகளை எடுத்துரைத்த ஜொஹாரி, "சீனாவிற்குப் பிறகு, மலேசியா
பார்க்க வேண்டிய அடுத்த நாடு இந்தியா" என்று கூறினார்.
உணவுப் பாதுகாப்பு குறித்து இந்தியாவின்
கவனத்தை ஜோஹாரி பாராட்டினார்!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *